வியாழன், 7 மே, 2026

தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம் - தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை


 பதிவு: வியாழக்கிழமை,  மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 03:15 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது.  இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது.  

இதனையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.  

ஆனால் திடீரென இந்த கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. . இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். 

இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அ.தி.மு.க. பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார். 

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  

காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது என கூறப்படுகிறது. 

த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.  

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.  எனினும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  இதனால், அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சென்று விடுவர்.

அந்த வகையில், தி.மு.க.வுக்கு 68 இடங்கள் இருக்கும்.  எனினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்போது, மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும்.  பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும். 

அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும்.  இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது.  

தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. 

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. 

எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் திமுக - அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.

புதன், 6 மே, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி வெளியாகுமா? - பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முக்கிய தகவல்


பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:15 AM

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது. 

புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றனர். 

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு - இன்று அவசர ஆலோசனை


 பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:10 AM

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 

ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். 

பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். 

த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம். 

ஏனெனில் காங்கிரசின் ஒரு பிரிவு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் த.வெ.க. வெற்றிக்குப்பின் ராகுல் காந்தி, விஜய்க்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இணைக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு உள்ளது. அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள பா.ம.க., த.வெ.க.வுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் அன்புமணி ராமதாஸ்-விஜய் சந்திப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே த.வெ.க.வுடன் சேர்ந்தால் அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சிகளிடம் எல்லாம் உள்ளது. எனவே அமைச்சர் பதவி இல்லாமல் இந்த கட்சிகள் த.வெ.க.வுடன் இணைய வாய்ப்பு மிக குறைவு. 

இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. எனவே அரசியலில் தங்களது நிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கான பணிகளை தொடரவும் விஜய்க்கு ஒரு ஆண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் அந்த கட்சிக்குள் நிலவுகிறது. 

ஒருவேளை அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் த.வெ.க. மற்ற கட்சிகளின் ஆதரவு எதுவும் தேவைப்படாது. அதே நேரத்தில் த.வெ.க.வும் யாருக்கும் ஆட்சியில் பங்கு தரதேவையில்லை. சுயமாகவே ஆட்சியை நடத்தலாம்.

‘ஜோசப் விஜய் ஆகிய நான்..’ - நாளை முதல்-அமைச்சராக பதவியேற்கிறார் - கவர்னருடன் இன்று சந்திப்பு

பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 08:55 AM

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய்,  வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி குறித்து கேட்டறிந்தார். 

அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் (50 சதவீதம் + 1) 118 தொகுதிகளை தனிக்கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும். 

ஆனால் 108 தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவை பெற த.வெ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனவே தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டு, கவர்னருக்கு விஜய் இ-மெயில் அனுப்பியுள்ளார்.

விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே (பெரம்பூர், திருச்சி கிழக்கு) வெற்றி பெற்றிருக்கிறார். 

அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது. 

எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 107 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 106 ஆக குறைகிறது. 

எனவே த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆதரவுத.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப தாங்கள் செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து கிரிஷ் சோடங்கர் டெல்லி சென்று இந்த விவரத்தை தலைமையிடம் தெரிவித்தார். இதனையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. 

இந்த கூட்டத்தை தொடர்ந்து கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல், குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தினோம். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய், அகில இந்திய தேசிய காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் கிடைத்த மக்கள் ஆணை, அரசியலமைப்பை அதன் எழுத்து மற்றும் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதசார்பற்ற அரசாங்கத்துக்கே என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவாக உள்ளது. 

எந்த வகையிலும் பா.ஜனதாவும், அதன் கைப்பாவைகளும் தமிழ் நாடு அரசை நடத்துவதை இந்திய தேசிய காங்கிரஸ் அனுமதிக்காது என் பதில் உறுதியாக உள்ளது. 

அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது. இதில் முடிவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. 

பெரும்பாலும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆத ரவுக்கரம் நீட்டும் என்றே தெரிகிறது.கவர்னருடன் சந்திப்புஇந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்று (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார். 

அதிக இடங்களை வென்ற கட்சி என்ற முறையில் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அப்போது புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான அனுமதியை கவர்னர் வழங்குவார். மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதமோ. அறிக்கையோ இருந்தால், அதை கவர்னரிடம் விஜய் அளிப்பார்.

முழு பெரும்பான்மை பெறாத கட்சி, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை கொடுத்து பெரும்பான்மையை கவர்னரிடம் காட்டினாலும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்துக்காட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தாலும், த.வெ.க.வால் அரியணை ஏற முடியும்.

நாளை அமைச்சரவை பதவி ஏற்புஅந்த வகையில்தான் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். 

இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நாளை காலையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கு 5 ஆயிரம் பேரை அழைக்க விஜய் முடிவு செய்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

“ஜோசப் விஜய் எனும் நான்..”பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு தலைமைச்செயலாளர் அழைப்பு விடுப்பார். 

முதலில் விஜய் மேடைக்கு வந்து, 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று முதல்-அமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார். 

அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர்கள் பதவி ஏற்பு முடிந்ததும், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவர்னர் மாளிகை, செய்திக்குறிப்பாக வெளியிடும்.

முதல்-அமைச்சர் விஜய்அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு வந்து, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறைக்கு வந்து அரசு அலுவல்களை தொடங்குவார். 

அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறைக்கு வருவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார். 

இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும். 

இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். 

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழக பொதுத்துறை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? - கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா? - காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை

 
 
பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM

திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்​தின் அடுத்த முதல்​வர் யார் என்​ப​தைத் தேர்வு செய்​யும் பணி​யில் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் தீவிர​மாக உள்​ளனர்.

கேரள மாநில சட்​டப் பேர​வைக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி(​யுடிஎஃப்) 102 இடங்​களைப் பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கடந்த 2016 முதல் 2010 வரை ஆட்​சி​யில் இருந்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணி(எல்​டிஎஃப்) 35 இடங்​களை​யும், பாஜக 3 இடங்​களை​யும் கைப்​பற்​றியது.

இந்​நிலை​யில் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு கேரளா​வில் காங்​கிரஸ் கட்சி ஆட்​சிக்கு வரு​வ​தால் காங்​கிரஸ் தொண்​டர்​கள் படு உற்​சாகத்​தில் உள்​ளனர். இதனிடையே முதல்​வர் பதவி​யில் அமரப் போகும் காங்​கிரஸ் தலை​வர் யார் என்ற போட்டி காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களிடையே ஏற்​பட்​டுள்​ளது.

பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், மூத்த தலை​வரு​மான வி.டி.சதீஷன், மூத்த தலை​வர் ரமேஷ் சென்​னிதலா, மாநிலங்​களவை எம்​.பி. கே.சி.வேணுகோ​பால் ஆகியோர் முதல்​வர் பதவியை பெறு​வதற்​கான பந்​த​யத்​தில் உள்​ளனர்.

இந்​நிலை​யில் கேரளா​வில் ஆட்​சியை அமைப்​ப​தற்​கான பணி​யில் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலரும், கேரள மாநில பொறுப்​பாள​ரு​மான தீபா தாஸ் முன்ஷி உள்​ளிட்​டோர் திரு​வனந்​த​புரத்​தில் முகாமிட்​டுள்​ளனர்.

அவர்​கள் கட்​சித் தலை​வர்​கள், எம்​எல்​ஏக்​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். மேலும் ஒவ்​வொரு எம்​எல்​ஏவை​ யும் தனித்​தனி​யாக அழைத்​துப் பேச​வும் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் முடிவு செய்​துள்​ளனர். 

அது​மட்​டுமல்​லாமல் காங்​கிரஸ் கட்​சி​யின் முக்​கிய கூட்​ட​ணிக் கட்​சி​யான இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக்​(ஐ​யுஎம்​எல்) தலை​வர்​களை​யும், மேலிடத் தலை​வர்​கள் சந்​தித்து ஆலோ​சிக்​க​வுள்​ளனர்.

இதைத் தொடர்ந்து நடை​பெறும் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில், கேரள முதல்​வரைத் தேர்வு செய்​யும் முடிவை காங்​கிரஸ் மேலிடத்​துக்கு வழங்​கும் தீர்​மானம் இயற்​றப்​படும் என்று மேலிட வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

தோல்வி யாரால்?

இதனிடையே எல்​டிஎஃப் கூட்​டணி தோல்விக்​கான காரணம் குறித்து ஆய்வு நடத்த இடது​சாரி கட்​சிகளின் தலை​வர்​கள் முடிவு செய்​துள்​ளனர். எல்​டிஎஃப் அரசில் இருந்த 13 அமைச்​சர்​கள் தேர்​தலில் தோல்வி கண்​டுள்​ளனர். இதுதொடர்​பாக​வும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சித் தலை​வர்​கள் சார்​பில் ஆலோ​சனை நடத்​தப்​பட​வுள்​ளது. மேலும் தோல்விக்​குப் பின்​னர் பத்​திரி​கை​யாளர்​களை முதல்​வர் பின​ராயி விஜயன் சந்​திக்​க​வில்​லை. விரை​வில் அவர் பத்​திரி​கை​யாளர்​களைச் சந்​தித்து பேட்​டியளிப்​பார் எனத் தெரி​கிறது.

தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு - கூட்டணி ஆட்சி? தவெக தரப்பில் துவங்கியது தீவிர பேச்​சு​வார்த்தை

பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM

சென்னை,

சட்டப்பேரவையில் பெரும்​பான்​மை​யைப் பெறு​வதற்​காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக 108 இடங்​களி​லும், திமுக கூட்​டணி 73 இடங்​களி​லும், அதி​முக கூட்​டணி 53 இடங்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள் தவெக​வுக்கு கிடைக்​க​வில்​லை.

தவிர, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகு​தி​யில் ராஜி​னாமா செய்ய வேண்​டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறை​யும். இந்த சூழலில், பெரும்​பான்​மையை நிரூபிக்க இன்​னும் 11 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவைப்​படு​வ​தால், அதி​முக​வுடன் தவெக தரப்பு தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக தெரி​கிறது.

இதுகுறித்து விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்​சி​யுடன்​தான் தவெக பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. அவர்​களிடம் 5 எம்​எல்​ஏக்​கள் மட்டுமே உள்ள நிலை​யில், முஸ்​லிம் லீக் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை ஒருங்​கிணைக்க காங்​கிரஸ் முயன்​றது. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி, தவெக​வுக்கு ஆதரவு அளிக்க இக்​கட்​சிகளில் ஒரு​மித்த கருத்து ஏற்​பட​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, அதி​முக​வில் இருந்து 20 எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பார்​களா என்று எஸ்​.பி.வேலுமணி​யிட​மும், பின்​னர் சி.​வி.சண்​முகத்​திட​மும் செங்​கோட்​டையன் தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடந்​த​தாககூறப்​படு​கிறது. அமைச்​சர் பதவி வழங்​கு​வ​தாக​வும் வாக்​குறுதி அளித்​த​தாக தெரி​கிறது.

இதை அறிந்த பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது ஆதர​வாளர்​களு​டன் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். அதி​முக சார்​பாகவே நேரடி​யாக தவெக​வுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது பாஜகவை தங்​கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்​தார்.

அப்​படி இருக்க, பாஜக​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​து​கொண்டே தவெகவை ஆதரிப்​பது சரி​யாக இருக்​காது என்​ப​தால், கட்​சி​யின் புதிய எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்தை பழனி​சாமி இன்று கூட்​டி​யுள்​ளார். தவெக​வுக்கு ஆதரவு தரு​வது தொடர்​பாக இக்​கூட்​டத்​தில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படும்​ என தெரிகிறது.

காங்கிரஸுடன் பேச்சு

இதற்​கிடையே, தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க விஜய் தங்​களிடம் ஆதரவு கோரி​யுள்​ள​தாக அகில இந்​திய காங்​கிரஸ் அமைப்​புப் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் தெரி​வித்​துள்​ளார். 

இதுதொடர்​பாக டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 

தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க ஆதரவு கோரி இந்​திய தேசிய காங்​கிரஸிடம் தவெக தலை​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் அரசி​யலமைப்பை அதன் உணர்​வின்​படி பாது​காக்க உறு​திபூண்ட ஒரு மதச்​சார்​பற்ற அரசாங்​கத்​துக்கே மக்​கள் அதி​காரம் அளித்​துள்​ளனர். இதில் காங்​கிரஸ் தெளி​வாக இருக்​கிறது.

எந்த வகை​யிலும் பாஜக​வும், அதன் கைப்​பாவை​களும் தமிழக அரசை நடத்​து​வதை காங்​கிரஸ் அனு​ம​திக்​காது என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது. அதன்​படி, தேர்​தல் தீர்ப்​பில் பிர​திபலித்​துள்ள மாநிலத்​தின் உணர்​வு​களைக் கருத்​தில் கொண்​டு, விஜய்​யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்​கு​மாறு தமிழக காங்​கிரஸ் கமிட்​டிக்கு காங்​கிரஸ் தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிமுகவுடன் பேச்சு

இந்த சூழலில், திருச்சி லால்​குடி தொகு​தி​யில் அதிமுக சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்​டின் சென்னையில் பழனி​சாமியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். 

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் லீமா ரோஸ் கூறிய​தாவது...

லால்​குடி​யில் நான் (அதி​முக), வில்​லி​வாக்​கத்​தில் எனது மரு​மகன் ஆதவ் அர்​ஜுனா (தவெக), புதுச்​சேரி காம​ராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் (லஜக) என்று ஒரே குடும்​பத்​தில் 3 பேர் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகி​யிருப்​பது மகிழ்ச்​சியை கொடுக்​கிறது.

இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்​கள் குடும்​பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறு​வோம் என்று நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. இது எங்​களுக்கு இன்ப அதிர்ச்​சி​யாக அமைந்​துள்​ளது. தவெக​வுக்கு பெரும்பான்மை இல்​லாத​தால், ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அதி​முக - தவெக இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் பேச்​சு​வார்த்தை நல்​லபடி​யாக முடி​யும் என்று நினைக்​கிறேன்.இவ்​வாறு அவர்​ கூறினார்.

அதிமுக ஆதரவு இல்லை?

இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.

பிரதமர், ராகுலுக்கு நன்றி

இதற்​கிடையே, தேர்​தல் வெற்​றிக்​காக வாழ்த்​திய தலை​வர்​களுக்கு விஜய் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நன்றி தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடி​யின் வாழ்த்​துகளுக்கு நன்​றி. மக்​களின் நலனே எங்​களது ஒரே இலக்​கு.

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழகத்​தின் முன்​னேற்​றம் மற்​றும் தமிழக மக்​களின் நலனில் நாங்​கள் முழு கவனம் செலுத்​து​வோம். இந்த முயற்​சி​யில் மத்​திய அரசின் ஆதரவை நாங்​கள் எதிர்​நோக்​கு​கிறோம்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் தொலைபேசி அழைப்பு மற்​றும் அன்​பான வாழ்த்​துகளுக்கு எனது மனமார்ந்த நன்​றி. மக்​கள் சேவை​யில் சிறந்து விளங்​கு​வ​தி​லும், கூட்டு ஒத்​துழைப்பு அவசி​ய​மான நமது மாநிலத்​தின் பண்​பாட்டு விழு​மி​யங்​களைப் பாது​காப்​ப​தி​லும் உறு​தி​யுடன் இருப்​போம். அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழக மக்​களின் நலனுக்கே நாங்​கள் முன்​னுரிமை அளிப்​போம்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. அதற்கு தேவையான ஆதரவை பெற, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், விஜய் தரப்பில் பேச்சு துவங்கியுள்ளது. 

இதற்கிடையில், சென்னையில் நேற்று நடந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக விஜய், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க, விஜய் தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, முதல்வருக்கான போலீஸ் பாதுகாப்பு அணிவகுப்போடு பனையூர் அலுவலகம் வந்தார்.

தேர்தல் வெற்றிக்கு பின், முதல்முறையாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய்க்கு, அங்கு கூடியிருந்த த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர், அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில், த.வெ.க.,வின் சட்டசபை குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது: 

நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, நமக்கு ஓட்டு போட்டுள்ளனர். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழக மக்கள் பணபலத்தையும், அதிகார பலத்தையும் துாக்கி வீசி உள்ளனர். சத்தமில்லாமல் 'விசில்' புரட்சி நடந்திருக்கிறது. வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அதே நேரத்தில், இனி தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மமதை நமக்கு ஒரு துளிகூட இருக்கக் கூடாது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை நமக்கு இருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள். 

நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மோடு வருவோருக்கு நாம் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல, 'ஆட்சி அமைக்கும் வரை, சென்னையை விட்டு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூர் செல்லக்கூடாது' என, தவெக தலைவர் விஜய் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி. சவுத்ரி வாகன விபத்தில் மரணம்

பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:10 AM

சென்னை,

ஆர்.பி. சவுத்ரி   1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சவுத்ரி  ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார். 

அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு ‘புதுவசந்தம்’ படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். 

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனித்துவமான பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். 

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர்  அவருடைய பூர்வீகம்.. இந்நிலையில்,  ஆர்.பி. சவுத்ரி  உதய்ப்பூர்  சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். 

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இன்று அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது. 

திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நில...