புதன், 6 மே, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி வெளியாகுமா? - பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முக்கிய தகவல்


பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:15 AM

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது. 

புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...