புதன், 6 மே, 2026

கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? - கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா? - காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை

 
 
பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM

திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்​தின் அடுத்த முதல்​வர் யார் என்​ப​தைத் தேர்வு செய்​யும் பணி​யில் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் தீவிர​மாக உள்​ளனர்.

கேரள மாநில சட்​டப் பேர​வைக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி(​யுடிஎஃப்) 102 இடங்​களைப் பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கடந்த 2016 முதல் 2010 வரை ஆட்​சி​யில் இருந்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணி(எல்​டிஎஃப்) 35 இடங்​களை​யும், பாஜக 3 இடங்​களை​யும் கைப்​பற்​றியது.

இந்​நிலை​யில் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு கேரளா​வில் காங்​கிரஸ் கட்சி ஆட்​சிக்கு வரு​வ​தால் காங்​கிரஸ் தொண்​டர்​கள் படு உற்​சாகத்​தில் உள்​ளனர். இதனிடையே முதல்​வர் பதவி​யில் அமரப் போகும் காங்​கிரஸ் தலை​வர் யார் என்ற போட்டி காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களிடையே ஏற்​பட்​டுள்​ளது.

பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், மூத்த தலை​வரு​மான வி.டி.சதீஷன், மூத்த தலை​வர் ரமேஷ் சென்​னிதலா, மாநிலங்​களவை எம்​.பி. கே.சி.வேணுகோ​பால் ஆகியோர் முதல்​வர் பதவியை பெறு​வதற்​கான பந்​த​யத்​தில் உள்​ளனர்.

இந்​நிலை​யில் கேரளா​வில் ஆட்​சியை அமைப்​ப​தற்​கான பணி​யில் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலரும், கேரள மாநில பொறுப்​பாள​ரு​மான தீபா தாஸ் முன்ஷி உள்​ளிட்​டோர் திரு​வனந்​த​புரத்​தில் முகாமிட்​டுள்​ளனர்.

அவர்​கள் கட்​சித் தலை​வர்​கள், எம்​எல்​ஏக்​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். மேலும் ஒவ்​வொரு எம்​எல்​ஏவை​ யும் தனித்​தனி​யாக அழைத்​துப் பேச​வும் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் முடிவு செய்​துள்​ளனர். 

அது​மட்​டுமல்​லாமல் காங்​கிரஸ் கட்​சி​யின் முக்​கிய கூட்​ட​ணிக் கட்​சி​யான இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக்​(ஐ​யுஎம்​எல்) தலை​வர்​களை​யும், மேலிடத் தலை​வர்​கள் சந்​தித்து ஆலோ​சிக்​க​வுள்​ளனர்.

இதைத் தொடர்ந்து நடை​பெறும் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில், கேரள முதல்​வரைத் தேர்வு செய்​யும் முடிவை காங்​கிரஸ் மேலிடத்​துக்கு வழங்​கும் தீர்​மானம் இயற்​றப்​படும் என்று மேலிட வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

தோல்வி யாரால்?

இதனிடையே எல்​டிஎஃப் கூட்​டணி தோல்விக்​கான காரணம் குறித்து ஆய்வு நடத்த இடது​சாரி கட்​சிகளின் தலை​வர்​கள் முடிவு செய்​துள்​ளனர். எல்​டிஎஃப் அரசில் இருந்த 13 அமைச்​சர்​கள் தேர்​தலில் தோல்வி கண்​டுள்​ளனர். இதுதொடர்​பாக​வும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சித் தலை​வர்​கள் சார்​பில் ஆலோ​சனை நடத்​தப்​பட​வுள்​ளது. மேலும் தோல்விக்​குப் பின்​னர் பத்​திரி​கை​யாளர்​களை முதல்​வர் பின​ராயி விஜயன் சந்​திக்​க​வில்​லை. விரை​வில் அவர் பத்​திரி​கை​யாளர்​களைச் சந்​தித்து பேட்​டியளிப்​பார் எனத் தெரி​கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...