வியாழன், 21 மே, 2026
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.
தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 17 மே, 2026
தமிழக அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் என்னென்ன..? - ஓர் அலசல்
சென்னை,
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது.
அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.
தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது.
அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.
கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு
திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது.
மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.
காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது..
இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார்.
அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனி, 16 மே, 2026
தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு - முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முழு விபரம்
சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார்.
அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.
முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.
அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை
அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை
அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறை
அமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை
அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள்
சென்னை,
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.
அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும்.
கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார்.
அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான விவாதம் நடைபெறும்.
தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.
எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.
வெள்ளி, 15 மே, 2026
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் - திட்டத்தை மறுசீரமைக்க முடிவு - புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது
சென்னை,
தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்படி, புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று வரவு வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதம் 15-ம் தேதியும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,
‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதல்வரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில்,
‘திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் சொன்னீர்கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்? மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஆலோசனை
அரசின் நிதிநிலையைப் பொருத்து நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற விழாவிலேயே விஜய் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலர் சாய்குமார், நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, முந்தைய திமுக ஆட்சியில் நிதிசார் செயல்பாடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
வியாழன், 14 மே, 2026
நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு - வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி - திமுக அணியினர் வெளிநடப்பு
சென்னை,
சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்தம் 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையி்ல், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களின் ஆதரவைத் தவெக பெற்றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆளுநர் அறிவுறுத்தலின்படி, சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கேட்டுக்கொண்டபடி. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
தொடர்ந்து, எஸ்.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), வன்னியரசு (விசிக), அ.மு.ஷாஜகான் (ஐயூஎம்எல்), அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.காமராஜ் (சுயேச்சை), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதரவாக பேசினர்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), தமிமுன் அன்சாரி (மஜக), நித்தியானந்தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். போஜராஜன் (பாஜக), சவுமியா அன்புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘பெரும்பான்மை மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கவில்லை’ என்று பேசியதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் பேசும்போது, ‘‘இந்த அரசு நிச்சயம் மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. குதிரை வேகத்தில் செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். எனவே, நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச்செய்து, ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என எண்ணிக் கணிக்குமாறு பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்குப் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்படி, பிரிவு வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக் கணிக்கப்பட்டனர். உறுப்பினர்களை எழுந்து நிற்கக்கூறி, பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் நிலைப்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வாக்கெடுப்பு விவரத்தை பேரவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி, 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும், 22 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாகவும் அறிவித்தார். இதன்மூலம் வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
புதன், 13 மே, 2026
நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து - சிபிஐ தீவிர விசாரணை
பதிவு: புதன்கிழமை, மே 13, 2026, சித்திரை, 30, பாரபவ வருடம் 02:55 AM
புதுடெல்லி,
வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுதொடர்பாக என்டிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்டிஏ உறுதி பூண்டிருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டோம்.
அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி என்டிஏவிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நீட் மறுதேர்வுக்குப் புதிதாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்கெனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். என்டிஏ-வின் சொந்த நிதியில் மறுதேர்வு நடத்தப்படும்.
மாணவ, மாணவிகள் ஏற்கெனவே எழுதிய தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கான தேதி, ஹால் டிக்கெட் குறித்து என்டிஏ சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி மற்றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறும்போது, “மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைப் பாழாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அகற்றப்படுவார்கள். வலுவான பாதுகாப்பு நடைமுறைகளோடு நீட் மறுதேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக விரைவில் விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு குறித்து என்டிஏ வட்டாரங்கள் கூறும்போது, “வினாத்தாள் கசிவு காரணமாகவே நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டம், வினாத்தாள், தேர்வு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படக் கூடும்" என்று தெரிவித்தன.
ரூ.100 கோடி வரை…
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
நீட் தேர்வுக்கான வினாத்தாளை அச்சடித்த அச்சகம் அல்லது வாகனங்களில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட போது வினாத்தாள் கசிந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல் வினாத்தாளை வழங்கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
வினாத்தாள் சில இடங்களில் ரூ.28 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிபட்டு உள்ளார்.
இதே வழக்கில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் சுபம் காரினார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் சார்பில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
டெல்லி மட்டுமன்றி பாட்னா, கோட்டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.
செவ்வாய், 12 மே, 2026
சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்
சென்னை,
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது.
17-வது சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.
இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார்.
துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எழிலன் நாகநாதனை எதிர்த்து போட்டியிட்டு 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு
சென்னை,
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், அவர் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார்.
சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.
சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்
முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
சென்னை,
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், அவர் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.
அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
சென்னை,
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், அவர் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார்.
வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர்.
அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
சென்னை,
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் நேற்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
திங்கள், 11 மே, 2026
ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க - வெளிநாட்டு பயணங்களை ஒத்திவையுங்கள் -Work From Home - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி,
ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் என மோடி கூறியுள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஹைதராபாத் - பணஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் திட்டம், சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:
சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக பயணம் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும் மற்றும் பொருளாதார அழுத்தமும் மக்களுக்கு குறையும்.
"கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். அதற்கு மக்கள் பழகியும் விட்டனர். இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், அதுபோன்ற நடைமுறையை மீண்டும் தொடங்குவதுதான்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில்
இது தேசிய நலனுக்கானதாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH), ஆன்லைன் கருத்தரங்குகள் மற்றும் விர்சுவல் கூட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயணங்களை குறைக்கும் விதமாக ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு முறைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த முறைகள், தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழலிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன டிஜிட்டல் தளங்கள் மூலம் உற்பத்தித்திறனை குறைக்காமல் பேணிக்காக்க முடியும். அதே நேரத்தில் எரிபொருள் தேவையையும் குறைக்க முடியும்.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள்
இறக்குமதியை குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்க வேண்டும் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியை சேமிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் பயன்பாட்டை குறைப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தால், அது தேச நலனுக்காக ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான பற்றாக்குறை இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை. வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்
பெட்ரோல், டீசல் விலையும் வரும் 15 ஆம் தேதிக்குள் ரூ.4 முதல் 5 வரை உயரக்கூடும் என்று சில தகவல் வெளியானது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
வீட்டில் இருந்தே வேலை..
கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், கச்சா எண்ணெய் விலை 126 டாலராக உள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயில் நிறுவனங்களுக்கு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
54 ஆயிரம் டன்னாக அதிகரிப்பு
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்கதேசத்தில் எண்ணெய் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா எல்பிஜி உற்பத்தியை 36 ஆயிரம் டன்னில் இருந்து 54 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கருத்தில்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்வதன் வாயிலாக, அன்னிய செலாவணியை சேமிப்பது மட்டுமின்றி, போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளில், சூரிய ஆற்றல் துறையில் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பெட்ரோல் எத்தனால் கலப்பு திட்டத்தில் பல்வேறு முன்னோடி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு, முதற்கட்டமாக 100 சதவீத வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியது. தற்போது, குழாய் வழி எரிவாயுவை சிக்கனமான முறையில் வினியோகிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அமைப்புகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த தொடர் முயற்சி காரணமாக, உலக அளவில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது.
சீர்திருத்தங்களின் விரைவுப் பாதையில் பயணித்து வரும் இந்தியா, அதே வேளையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்.
ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா வேண்டாம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், காசிபேட் - விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையத்தையும், காசிபேட் ரயில் மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் சிவ பிரதாப் சுக்லா, காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஞாயிறு, 10 மே, 2026
தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்! - ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை,
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன.
விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது.
நேற்று மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்... ‘ஜோசப் விஜய் சந்திரசேகரன் எனும் நான்...’
சென்னை,
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.
இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.
தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.
இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.
இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.
சனி, 9 மே, 2026
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. கையெழுத்திட்ட வீடியோ வெளியீடு - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி
சென்னை,
தமிழக அரசியலில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டிய சூழலில், இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் அக்கட்சி தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர்.
இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும்.
எனினும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வது, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது.
இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.
அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார்.
விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை.
நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர்.
ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம். அந்த கடிதங்களை ஆராய வேண்டும். அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.
போலீசிடமும் புகார் அளிக்க உள்ளேன் என்றார். தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது. த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது. உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டது. இதனை அறிந்து எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.
த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார். . கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார்.
போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்துள்ளார்.
இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலி கடிதம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிண்டி காவல் நிலையத்தில் டி.டி.வி. தினகரன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு வீடியோ வெளியிட்டு த.வெ.க. பதிலளித்து உள்ளது. அ.ம.மு.க. எம்.எல்.ஏ. சுய நினைவுடன்தான் கடிதம் கொடுத்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், அவர் தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியுடன் த.வெ.க.வுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதினார்.யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறி, காமராஜ் கடிதம் கொடுத்த வீடியோ ஒன்று த.வெ.க. தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. . அதில், காரில் அமர்ந்தபடி கடிதத்தில், காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.
உண்மையை மறைத்து விட்டு பொய்யான தகவலை அவர் பேசி வருகிறார் என்றும் த.வெ.க. தெரிவித்து உள்ளது. இதனால், இந்த விவகாரம் பரபரப்பு அடைந்துள்ளது.
மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.
கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.
இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.
அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர்.
காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.
அக்கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.
உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர்.
உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம்.
அந்த கடிதங்களை ஆராய வேண்டும். அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன். மீண்டும் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார்.
மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர். . அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது.
த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது. உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.
மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.
கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார்.
போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.
இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல் நீடிப்பு
சென்னை,
தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு 2 இடங்கள் தேவைப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது.
த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆட்சி அமைப்பதற்கு த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது.
தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து விஜய் இன்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார்.
அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது.
இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி - 2,639 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்று சாதனை
சென்னை,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல, மாணவிகளே முன்னிலையில் உள்ளனர்.
489 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்களில் நடைபெற்றது. பதிவு செய்த 7 லட்சத்து 99,528 மாணவ, மாணவிகளில் 7 லட்சத்து 91,654 பேர் தேர்வு எழுதினர். 7,874 பேர் (0.98%) பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னை டிபிஐ வளாகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்), பள்ளிகளுக்கு மின்னஞ்சலிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவு விவரங்கள் அனுப்பப்பட்டன. முதல்முறையாக வாட்ஸ்அப் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (95.03%) இது 0.17 சதவீதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 3.81 சதவீதம் அதிகம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 1,695 பேர் உட்பட மொத்தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 98.87 சதவீதத்துடன் ஈரோடு முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை (98.05%), கன்னியாகுமரி (97.63%) மாவட்டங்கள் அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் விழுப்புரம் (85.92%) உள்ளது.
தலைநகர் சென்னையில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவிலும் ஈரோடு (98.24%) மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்கடுத்த 2 இடங்களைப் பிடித்துள்ளன. விழுப்புரம் (82.10%) மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இத்தேர்வில் 7,536 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 489 அரசுப் பள்ளிகள் உட்பட 2,639 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.தனியார் பள்ளிகளின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலையில் தற்போது 98.72% ஆக குறைந்துள்ளது. அதேநேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்துள்ளது.
25,521 தனித் தேர்வர்களில் 6,171 பேர் (24%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 8,855 மாற்றுத்திறன் மாணவர்களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதிகளில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 வகுப்பில் தனித் தேர்வர்களாக 20,444 பேர் தேர்வு எழுதியதில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் வழங்கப்படும். விடைத்தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூனில் துணைத் தேர்வு
பொதுத் தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர ஏதுவாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
கட்ஆஃப் குறையும்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பிரதானமான கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட சற்று குறைந்துள்ளது. தவிர, முழு மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2025-ல் வேதியியல் 3,181, கணிதம் 3,022, இயற்பியல் 1,125 பேர் என ‘சென்டம்’ பெற்ற நிலையில், தற்போது வேதியியல் 632, கணிதம் 732, இயற்பியல் 105 பேர் என குறைந்துள்ளது.
இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கட்ஆஃப் 180-200 பிரிவில் 2 முதல் 4 வரையும், 160-179 பிரிவில் 6 முதல் 8 வரையும் மதிப்பெண் குறையும். இதுதவிர, நீட் தேர்வு தேவைப்படாத கால்நடை மருத்துவம் போன்ற இதர மருத்துவப் படிப்புகளுக்கும் கட்ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100
பாடவாரியாக 100-க்கு 100 பெற்றவர்களின் எண்ணிக்கை:
தமிழ் - 83
ஆங்கிலம் - 21
இயற்பியல் - 105
வேதியியல் - 632
உயிரியல் - 784
கணிதம் - 732
தாவரவியல் -31
விலங்கியல் - 18
கணினி அறிவியல் - 6,945
வணிகவியல் - 683
கணக்குப் பதிவியல் - 1,946
பொருளாதாரம் - 440
வரலாறு - 282
புவியியல் - 42
கணினி பயன்பாடுகள் - 2,099
வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல் - 463
புள்ளியியல் - 17
மனையியல் - 6
கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்
பிளஸ் 2 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி வீதம் அதிகமாகவும், பொருளாதார பாடத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. தேர்ச்சி வீதம் வருமாறு:
மொழிப்பாடம் - 98.96%
ஆங்கிலம் - 98.74%
இயற்பியல் - 98.87%
வேதியியல் - 98.82%
உயிரியல் - 99.49%
கணிதம் - 99.12%
தாவரவியல் - 98.62%
விலங்கியல் - 98.69%
கணினி அறிவியல் - 99.84%
வணிகவியல் - 97.55%
கணக்குப் பதிவியல் - 98.94%
வரலாறு - 97.90%
புவியியல் - 99.32%
புள்ளியியல் - 99.58
பொருளாதாரம் - 97.54%
மனையியல் - 96.89%
பாடப் பிரிவுகள் (குரூப்) வாரியாக தேர்ச்சி வீதம்:
அறிவியல் பிரிவு - 96.90%
வணிகவியல் - 92.67%
கலை - 85.19%
தொழிற்பாடம் - 85.97%
மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)
ஈரோடு 98.87
சிவகங்கை 98.05
கன்னியாகுமரி 97.63
திருநெல்வேலி 97.54
திருச்சி 97.50
தூத்துக்குடி 97.24
தஞ்சாவூர் 97.19
தென்காசி 97.18
விருதுநகர் 97.17
நாமக்கல் 97.04
திருப்பூர் 97.03
ராமநாதபுரம் 96.70
கோவை 96.66
சேலம் 96.61
கரூர் 96.20
மதுரை 96.13
திண்டுக்கல் 95.92
புதுக்கோட்டை 95.88
கடலூர் 95.57
சென்னை 95.43
காஞ்சிபுரம் 95.31
தேனி 95.27
பெரம்பலூர் 94.53
நாகப்பட்டினம் 94.38
கள்ளக்குறிச்சி 94.26
நீலகிரி 94.13
திருவள்ளூர் 94.11
திருப்பத்தூர் 93.68
மயிலாடுதுறை 93.51
தருமபுரி 93.49
செங்கல்பட்டு 93.25
தி.மலை 92.87
அரியலூர் 91.70
கிருஷ்ணகிரி 91.31
திருவாரூர் 91.00
வேலூர் 90.73
ராணிப்பேட்டை 88.20
விழுப்புரம் 85.92
வெள்ளி, 8 மே, 2026
தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது.
இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதன்படி, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.
பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் அடுத்த முதல்வர்? - ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?
சென்னை,
தனித்தே நின்று 108 இடங்களை வென்றும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் விஜய். எனினும் அறுதிப் பெரும்பான்மைக்கு மிக அருகில் நிற்பதால் எப்படியும் விஜய் தமிழக முதல்வராவார் என தவெக-வினர் நம்புகிறார்கள். இதற்கு நடுவே, அதிமுக ஆட்சியமைக்க திமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்றும் தகவல்கள் தடதடக்கின்றன.
திமுக-வை எதிர்த்தும் விமர்சித்தும் மட்டுமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்பதுதான் இரண்டு கட்சிகளுக்குமே நல்லது. அப்படி இருப்பதால் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதனால் இவர்களிடம் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் அதற்குப் பிறகு எழவே முடியவில்லை.
இந்த நிலையில்தான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் தலைதூக்கியது. ஆனால், அந்தக் கட்சியாலும் இப்போது வரைக்கும் திராவிடக் கட்சிகள் தயவில்லாமல் முன்னுக்கு வரமுடியவில்லை. என்றபோதும், விஜய்யின் வரவால் இம்முறை திராவிடக் கட்சிகளின் தலைமை இல்லாத ஓர் அரசாங்கம் தமிழகத்தில் அமையும் சூழல் உருவாகி இருக்கிறது. காங்கிரஸ், பாஜ கட்சிகளால் சாதிக்க முடியாத இந்த அதிசயத்தை சாதித்துக் காட்டி இருக்கிறார் விஜய்.
இருந்த போதும் அறுதிப் பெரும்பான்மைக்காக, இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறார் விஜய். இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதேபோல் பழைய பாசத்தில் விசிக தலைவர் திருமாவளவனிடம் நேற்று முன்தினம் மாலை ஆதவ் அர்ஜுனா நேரடியாகவே பேசி இருக்கிறார்.
முதலில் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக சொன்ன திருமாவளவன், இரவு 8 மணிக்குமேல் ஆதவ் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டபோது வேறுவிதமாக பதில் சொல்லி இருக்கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்புக்கு பிடிகொடுக்கவில்லை. என்றாலும் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்சிகளுமே வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில், இந்தக் கட்சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பாமக தரப்புடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை தவெக. இருப்பினும் இரண்டு தரப்பிலும் சிலர் நட்பு ரீதியில் பேசியபோது, தங்களுக்கு துணை முதல்வர் பதவியை தருவதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். இதற்கு சாத்தியமில்லை என்பதால் மேற்கொண்டு இதுபற்றி தவெக தரப்பில் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க ஆலோசனை நடப்பதாக நேற்று முன்தினம் ஒரு செய்தி காட்டுத் தீயாய் கசிந்தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் கான்வாய் விலக்கப்பட்டதும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக உள்வட்ட நிர்வாகிகள் சிலர், “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதைவிட தனது தந்தை ஸ்டாலின் தோற்றதை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இதை சரிசெய்ய வேண்டும் என்
பதில் தீவிரமாய் இருக்கிறார் உதயநிதி. அதிமுக உடன் திமுக கைகோர்க்கிறது என்ற செய்தியும் உதயநிதி தரப்பில் இருந்தே கசிந்திருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமியின் மகன் மிதுனுடன் நேற்று முன்தினம் உதயநிதி பேசியதாகவும் சொல்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காலூன்றி இருக்கும் விஜய், ஆட்சியில் அமர்ந்தால் திராவிடக் கட்சிகளில் ஒன்று நிச்சயம் காணாமல் போய்விடும். ஏற்கெனவே கரைந்து கொண்டிருக்கும் அதிமுக அந்த இடத்துக்கு தள்ளப்பட நிறையவே வாய்ப்பிருக்கிறது.
இதையெல்லாம் உணர்ந்தே, அதிமுக தரப்பிலும் ‘திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி’ என்ற செய்திகளை யாரும் மறுக்கவில்லை. மாறாக, “118 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திப்பார் பழனிசாமி” என திடமாகச் சொல்லி இருக்கிறார் புதுச்சேரி மாநில அதிமுக அமைப்பாளர் அன்பழகன்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் சொன்ன அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலைகூட, “திமுக ஆதரவு குறித்து பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்றுதான் சொல்லி இருக்கிறார்.
திமுக - அதிமுக ஆட்சி குறித்த செய்திகளை டெல்லி பாஜக தலைமையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவுக் ‘கரம்’ நீட்டி இருப்பது. விஜய் செல்வாக்கில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது பாஜக. அதன் காரணமாகவே, அறுதிப் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் பட்டியலைக் கேட்டு விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இழுத்திருக்கிறார் ஆளுநர்.
விஜய் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக பழனிசாமியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முடிவுக்கு திமுக வந்திருப்பதாக சொல்பவர்கள், “இது தொடர்பாக டெல்லியின் அனுமதியோடு அதிமுக சில மூவ்களை எடுத்து வருகிறது. அதன்படி நேற்றே பழனிசாமி ஆளுநரை சந்திப்பதாக இருந்தது.
ஆனால், விஜய்க்கு சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்ததால் நேற்று ஆளுநர் - பழனிசாமி சந்திப்பு நடக்கவில்லை.
புதுச்சேரி சென்ற பழனிசாமி அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார். திமுக ஆதரவு குறித்து அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இன்று திமுக ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை பழனிசாமி சந்திக்கக் கூடும் என தெரிகிறது.
விஜய்க்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அமையாத காரணத்தால் நாங்கள் பழனிசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்படலாம். தங்களின் இந்த முடிவால் விஜய்யை ஆட்சியமைக்க முடியாமல் தடுத்துவிட முடியும் என நம்புகிறார் உதயநிதி.
அதேபோல், பழனிசாமியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் அதிமுக-வை பிளவில் இருந்து காப்பாற்ற முடியும் என நினைக்கிறார்” என்கிறார்கள்.
யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிமுக ஆட்சி திமுக ஆதரவில் அமையுமா... திமுக எதிர்ப்பிலேயே வளர்ந்த அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரும் ஒரேமுகமாய் இதை ஏற்பார்களா... அல்லது திமுக உறவை காரணம் காட்டி அதிமுக-வில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
தவெக தலைவர் விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு - 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி
சென்னை,
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சி தீவிரம்
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.
இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர்.
சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.
சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அழைக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம்
ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் 2-வது நாளாக நேற்றும் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்றும், அழைக்கவில்லை என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...























