செவ்வாய், 12 மே, 2026

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...