வெள்ளி, 15 மே, 2026

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் - திட்டத்தை மறுசீரமைக்க முடிவு - புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே  15, 2026, வைகாசி, 01, பாரபவ வருடம் 02:30 AM

சென்னை,

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் இடைநிற்​றல் இல்​லாமல் உயர்​கல்​வியைத் தொடர்​வதற்​காக புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்​டங்​கள் முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. 

அதன்​படி, புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாணவி​களுக்​கும், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் மாணவர்​களுக்​கும் மாதம்​தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாத​மும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்​கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முந்​தைய அரசுகளால் கொண்டு வரப்​பட்ட முக்​கிய மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் உறுதியளித்​தார். 

இதன் தொடர்ச்​சி​யாக, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கிலும் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. இதனால் மாணவர்​கள், பெற்​றோர் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதற்​கிடையே, தமிழகம் முழு​வதும் 1.31 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாதம் 15-ம் தேதி​யும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்​கப்​பட்டு வரு​கிறது. 

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், 

‘மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. நடப்பு மே மாதத்​துக்​கான உரிமைத் தொகை, பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதே​நேரம் முதல்​வரின் அறி​விப்பை திமுக தலை​வர் ஸ்டா​லின் விமர்​சனம் செய்​துள்​ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், 

‘தி​முக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் சொன்​னீர்​கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்​டும். ஏற்​கெனவே உள்ள திட்​டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்​யப் போகிறீர்​கள்? மாதம் ரூ.2,500 தரு​வ​தாக வாக்​குறுதி தந்​து​விட்​டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்​தடிப்​பது​தான் உங்​கள் மாற்​ற​மா?’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

முதல்​வர் ஆலோ​சனை

அரசின் நிதி​நிலை​யைப் பொருத்து நலத் ​திட்​டங்​களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்​டும். அரசின் நிதி​நிலை தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்​வ​ராக பதவி​யேற்ற விழா​விலேயே விஜய் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் தமிழக அரசின் நிதி​நிலை தொடர்​பாக துறை​சார்ந்த உயர் அதி​காரி​களு​டன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

தலை​மைச் செயலர் ​சாய்​கு​மார், நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் உள்​ளிட்ட அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நடப்பு ஆண்​டுக்​கான பட்​ஜெட், புதிய திட்​டங்​களுக்​குத் தேவைப்​படும் நிதி ஒதுக்​கீடு, முந்​தைய திமுக ஆட்​சி​யில் நிதி​சார் செயல்​பாடு​கள் தொடர்​பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது. 

தொடர்ந்​து, தொழில் முதலீட்​டுக் கழகம் மற்​றும் வர்த்​தகத் துறை செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​ கூட்​ட​மும்​ நடை​பெற்​றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...