திங்கள், 22 ஜூன், 2026

முதல்-அமைச்சராக ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடும் ஜோசப் விஜய்... இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  22, 2026,  ஆனி  08, பாரபவ வருடம்  3.50 AM

சென்னை,

'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக வெற்றிக்கழகம்தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டினார்.

'விசில்' சத்தம்

விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2-வது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். லட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது. 

அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை த.வெ.க. எதிர்கொண்டது. 

விசில் சின்னத்துடன் கூட்டணியின்றி மக்களை சந்தித்த விஜய், 'உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் மக்கள் மனதை தொட்டது. அவர் பிரசாரத்திற்கு சென்ற, செல்லாத இடங்களிலும் 'விசில்' சத்தம் தெறிக்க விட்டது.

முதல்-அமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்திரையில் மட்டுமல்ல. தேர்தலிலும் விஜய் 'சர்க்கார்' அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். 

'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கியது.

மே 10-ந்தேதி ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்று (திங்கட்கிழமை) 52-வது பிறந்தநாள்.

இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. 

தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.

இன்று புதிய அறிவிப்புமுதல்-அமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ தொழிற்சாலையில் பரிதாபம் - அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  22, 2026,  ஆனி  08, பாரபவ வருடம்  3.00 AM

திரு​வள்​ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார். 

திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டு 2 பெண் தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் வட மாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் 63 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் எனமொத்​தம் 65 தொழிலா​ளர்​கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். 

பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனை களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

இதில், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்​பெண்​ணும், செங்​குன்​றம் அருகே உள்ள சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 20 பேரில் ஒடி​சாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்​பெண்​ணும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாகஇருப்​ப​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், குமார் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் விஜயகு​மார், ரவி, அருண்​கு​மார் ஆகியோ​ரும் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவி​தா, காஞ்​சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திரு​வள்​ளூர் மாவட்ட எஸ்​.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்​சாலை​யில் ஆய்வு நடத்​தினர்​.

இதற்​கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழு​வினர், கும்​மிடிப்​பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்​களு​டன் இணைந்து பாது​காப்பு உபகரணங்​களு​டன் சம்பவ இடத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் தொழிற்​சாலை​யில் ஆய்வு மேற்​கொண்​டு வரு​கின்​றனர்.

தொழிற்​சாலை​யைச் சுற்றி ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். அங்கு பணி​யாற்​றிய தொழிலா​ளர்​களில் 100-க்​கும் மேற்​பட்​டோர் மாவட்ட நிர்​வாகம் ஏற்​பாட்​டில் அரு​கில் உள்ள திருமண மண்​டபங்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, மருத்​து​வப் பரிசோதனை, உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு தொடர்​பாக பெரிய​பாளை​யம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலா​ளர் டேனியல்​ ஆகிய 3 பேரை கைது செய்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​. தொழிற்​சாலை செயல்​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வி்த்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், 

‘திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டிருப்​பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்​தேன். தங்​களின் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்

விலைம​திப்​பற்ற உயிர்​கள் பறி​போனதும், பல தொழிலா​ளர்​கள் காயமடைந்​ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது. மேலும், சிகிச்​சை​யில் உள்ள அனை​வரும் விரை​வில் குணமடைந்து முழு உடல்​நலம் பெற​வும் பிரார்த்​திக்​கிறேன்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல். இது​போன்ற துயரச் சம்​பவங்​கள், இனி​யும் ஏற்​ப​டா​மல் இருக்க, தொழிற்​சாலைகளில் உரிய பாது​காப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்று ஆய்​வு​களை நடத்த வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி

வாயுக் கசி​வால் பாதிக்​கப்​பட்ட பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் நிலை​யில், அவர்​களை காக்க உரிய மருத்​துவ சிகிச்​சைகள் அளிப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை

நச்சு வாயுவை சுவாசித்து பரி​தாப​மாக உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

கடந்த சில காலங்​களாகவே தொழில் நடக்​கும் பகு​தி​களில் இது​போன்ற அசம்​பா​விதங்​கள் தொடர்​வதும் அதனால் உயிர்​பலிகள் உண்​டாவதும் அச்​சத்தை ஏற்​படுத்​துகின்​றன.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்து உள்​ளனர்.


ஞாயிறு, 21 ஜூன், 2026

தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  21, 2026,  ஆனி  07, பாரபவ வருடம்  3.00 AM

சென்னை,

இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் தேர்வை எழுதுகின்​றனர். இதையொட்​டி, பாது​காப்​பு, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 

தேர்வு முடிவு​களை இந்த மாத இறு​திக்​குள் வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல, ராணுவக் கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது.

நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. விண்​ணப்​பித்​திருந்த 22.80 லட்​சம் பேரில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்வு எழு​தினர்.

வினாத்தாள் கசிந்தது

 இதற்​கிடையே, நீட் தேர்​வுக்​கான வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​தது உறுதி செய்​யப்​ பட்​ட​தால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்​திய அரசு ரத்து செய்​தது. வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். நீட் மறு​தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. நாடு முழு​வதும் மொத்​தம் 551 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், சிங்​கப்​பூர் உட்பட 14 நாடு​கள் என சுமார் 5,500 மையங்​களில்நடை​பெறும் தேர்வை 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழுதுகின்றனர். தமிழகத்​தில் மட்​டும் 307 தேர்வு மையங்​களில் 1.42 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்​வில் பங்​கேற்க உள்​ளனர்.

ஏற்​கெனவே வினாத்​தாள் கசிந்​துள்​ள​தால், மீண்​டும் அது​போன்ற சம்​பவம் நடை​பெறாமல் இருக்க பல்​வேறு பாது​காப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​கள் பாது​காப்​பான முறை​யில் தேர்வு மையங்​கள் உள்ள நகரங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​களை கொண்டு செல்ல ஹெலி​காப்​டர்​களும் பயன்​படுத்​தப்​பட்​டன.

தேர்வு மையங்களில் சிசிடிவி: அதே​போல, அனைத்து நீட் தேர்வு மையங்​களை​யும் சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்வு மையங்​களை கண்​காணிக்க ஒருங்​கிணைப்​பாளர்​கள், கண்​காணிப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படு​கின்​றனர். நீட் மறு​தேர்வு பணி​களில் 2 லட்​சம் அலு​வலர்​கள் ஈடுபடுகின்​றனர்.

வழக்​க​மாக, நீட் தேர்வு பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடை​பெறும். நிர்​வாக நடை​முறை​களால் மாணவர்​களின் தேர்வு நேரம் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, இந்த முறை கூடு​தலாக 15 நிமிடங்​கள் தேர்வு நேரம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.

தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி அளிக்​கப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்வு அறைக்கு செல்​வதற்கு முன்பு மாணவர்​கள் மெட்​டல் டிடெக்​டர் மூலம் சோதனை செய்​யப்பட உள்​ளனர். ஆள்​மாறாட்ட மோசடியைத் தடுக்​கும் வகை​யில் ஆதார் அடிப்​படையி​லான பயோமெட்​ரிக் சோதனை​யும் கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. மதம், கலாச்​சா​ரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளை​யல், கம்​மல், மூக்​குத்​தி, செயின், கண்​ணாடி, தாயத்​து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்​கள், காலணி​கள் அணிந்து வரவும், செல்​போன், கால்​குலேட்​டர், ஸ்மார்ட் வாட்ச் உள்​ளிட்ட மின்​னணுக் கருவி​களை எடுத்து வரவும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

13 மொழிகளில் தேர்வு

நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடை​பெறுகிறது. இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில், 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படும். ஒரு தவறான பதி​லுக்கு 1 மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் தேர்வு முடிவு​களை இம்மாத இறு​திக்​குள்​ வெளி​யிட தேசி​யத்​ தேர்​வு​கள்​ முகமை திட்​டமிட்​டுள்​ளது.

சனி, 20 ஜூன், 2026

மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது - சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  20, 2026,  ஆனி  06, பாரபவ வருடம்  1.00 AM

சென்னை,

சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.

கா​விரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், புதிய அணை கட்​டும் திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் அளிக்​கக் கூடாது என்று மத்​திய அரசை வலி​யுறுத்​தி​யும் சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்​மானம், அனைத்​துக் கட்​சிகளின் ஆதர​வுடன் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

மேகே​தாட்​டு அணை தொடர்பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்​மானம் கொண்டு வந்​தார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: காவிரி நடு​வர் மன்​றம் கடந்த 2007 பிப்​.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்​பு, உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018 பிப்​.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகிய​வற்றை மதிக்​காமல், சம்​பந்​தப்​பட்ட படுகை மாநிலங்​களின் ஒப்​புதலை​யும், மத்​திய அரசின் எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமல் தன்​னிச்​சை​யாக மேகே​தாட்​டு​வில் அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சிப்​பதை ஏற்க முடி​யாது. கர்​நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

கர்​நாடக அரசின் மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்கு தொழில்​நுட்​பம், சுற்​றுச்​சூழல் உட்பட எவ்​வித அனு​ம​தி​யை​யும் மத்​திய அரசு அளிக்​கக் கூடாது. காவிரி நடு​வர் மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும், காவிரிப் படுகை ஒரு பற்​றாக்​குறை படுகை எனக் குறிப்​பிட்​டு, படு​கை​யின் மொத்த நீரை​யும், படுகை மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளித்​து​விட்​ட​தால், காவிரிப் படு​கை​யில் புதிய திட்​டங்​களை மேற்​கொள்​ளவோ, கூடு​தலாக நீரை பயன்​படுத்​தவோ இயலாது.

இந்த விவ​காரம் தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநிலங்​களின் உணர்​வுப்​பூர்​வ​மான பிரச்​சினை. எனவே, மேகே​தாட்​டு​விலோ, காவிரிப் படு​கை​யில் வேறு எந்த இடத்​திலோ அணை அல்​லது புதிய நீர்த்​தேக்​கத் திட்​டத்​தை, பிற படுகை மாநிலங்​களின் ஒப்​புதலின்​றி​யும், மத்​திய அரசின் அனு​ம​தி​யின்​றி​யும் மேற்​கொள்​ளக் கூடாது என கர்​நாட​காவை மத்​திய அரசு அறி​வுறுத்த வேண்​டும். கர்​நாடக அரசின் விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வளக் குழு​மம் பரிசீலிக்​கவோ, அதன்​மீது நடவடிக்கை மேற்​கொள்​ளவோ, அதற்கு அனு​மதி வழங்​கவோ கூடாது. மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​கீழ் புதிய நடு​வர் மன்​றத்தை மத்​திய அரசு அமைக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தீர்​மானத்தை முன்​மொழிந்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: 

அரசி​யல் கட்​சிகளுக்​குள் கொள்​கை, நிலைப்​பாடு​களில் வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால், மக்​களுக்​கான பிரச்​சினை என்​றால், எல்லா கட்​சிகளுமே மக்​கள் பக்​கம்​தான் நிற்​கும். நமது விவ​சா​யிகள், மக்​களுக்​காக நிற்க வேண்​டியது நமது கடமை. நதிநீர் உரிமை​யைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் நம் அனை​வருக்​கும் உள்​ளது.

அந்த உணர்வு அடிப்​படை​யில், கட்சி வேறு​பாடு​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு, யாரும் யாரை​யும் குறை சொல்​லாமல் ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​காக நாம் அனை​வரும் ஓரணி​யில் நிற்​பவர்​கள் என்​பதை நிரூபிக்க வேண்​டும். 

நமது விவ​சா​யிகள், தமிழக மக்​களுக்​காக கொண்டு வரப்​படும் இந்த தீர்​மானத்தை ஒரு​மித்த கருத்​துடன் அனை​வரும் நிறைவேற்​றித் தரவேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இதைத் தொடர்ந்​து, தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தில் பேசிய திமுக, அதி​முக, காங்​கிரஸ், விசிக, பாமக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், தேமு​திக, கொமதேக, மதி​முக, மமக, மஜக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் உறுப்பினர்களும் தங்​கள் ஆதர​வைத் தெரி​வித்​தனர்.

உதயநிதியின் கோரிக்கை ஏற்பு

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது, ‘‘மேகே​தாட்டு அணை கட்​டும் பிரச்​சினை ஒரு புதிய விவாதம் என்​ப​தால், மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​படி, புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என மத்​திய அரசை இந்த பேரவை வலி​யுறுத்​துகிறது எனும் திருத்​தத்தை சேர்க்க வேண்​டும்’’ என்றார்.

அதற்கு முதல்​வர் விஜய், ‘‘மேகே​தாட்டு பிரச்​சினை குறித்து எனது தலை​மை​யில் கடந்த மே 26-ம் தேதி நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், தனி நடு​வர் மன்​றம் அமைப்​பது குறித்து சட்ட வல்​லுநர்​களு​டன் ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, தனி நடு​வர் மன்​றம் அமைக்​கத் தேவை​யான சட்ட நடவடிக்​கைகள் ஏற்​கெனவே எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

எனவே, எதிர்க்​கட்​சித் தலை​வர் அளித்த கருத்தை தனித் தீர்​மானத்​தில் கூடு​தலாக சேர்க்​கலாம்’’ என்​றார். அதன்​பிறகு, முதல்​வர் முன்​மொழிந்த திருத்​தப்​பட்ட தீர்​மானம், பேர​வை​யில் குரல் வாக்​கெடுப்பு மூல​மாக ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது. தீர்​மானத்​துக்​கு ஆதர​வு அளித்​த அனைத்​துக்​ கட்​சிகளுக்​கும்​ முதல்​வர்​ நன்​றி தெரிவித்​தார்​.

நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்

முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. 

அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. 

இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

வியாழன், 18 ஜூன், 2026

“விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவுக்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்..” - கவர்னர் அர்லேகர்

பதிவு: வியாழக்கிழமை, ஜூன்  18, 2026,  ஆனி  04, பாரபவ வருடம்  2.00 PM

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. 

முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காரில் புறப்பட்டார். 

வரவேற்பு

காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

சட்டசபை கூட்டம் தொடங்கியதுதொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தபடி, கவர்னர் அர்லேகர் சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வருகை தந்தார். 

அவருடன் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் உடன் வந்தார். சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 

சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் அர்லேகர் வந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர். .

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து

முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து, தனது உரையை கவர்னர் அர்லேகர் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விசில் புரட்சி

தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும். 

பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்.  

சிங்கப்பெண் அதிரடிப்படைமாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் ஆகும். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும். 

போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும். 

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரெயில்

தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.

இரு மொழிக் கொள்கை

தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. 

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. 

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.

கடன் சுமைகடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.

ஒலிம்பிக் மையங்கள்மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை தவெக அரசு மேற்கொள்ள உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும். 

கோவில் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்..மேகதாது அணைகர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும். 

மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும்.

சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிதிப் பகிர்வு

மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். 

சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும்.

சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளைசென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.

 முதலீடுகளை ஈர்க்க முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க AI பயன்படுத்தப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு கவர்னர் அர்லேகர் கூறினார்.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்

 பதிவு: வியாழக்கிழமை, ஜூன்  18, 2026,  ஆனி  04, பாரபவ வருடம் 06:00

சென்னை,

சட்டசபை கூட்டம் தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. 

புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. 

சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். 

இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

கவர்னர் உரைபேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில், கவர்னர் அர்லேகர் பங்கேற்று, உரையாற்றுவார். 

புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் அந்த உரையில் இடம் பெறும். 

இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்.

சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.

தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் கவர்னர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். 

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

புதிய அறிவிப்புகள்

இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப் படும். 

மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள் திட்டம்அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளன. 

இதனால் கேள்வி நேரத்தில் அனல் பறக்கும் கேள்விகள், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அதிரடி பதில்கள் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

புதன், 17 ஜூன், 2026

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. 

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில்   தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் 

முதல்-அமைச்சர் விஜய் - யின் உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.

தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை, சென்னையில் நேற்று, விஜய் அரசு வெளியிட்டது. தமிழகத்திற்கு முந்தைய தி.மு.க., அரசு வைத்து சென்றுள்ள கடன் சுமை, 13.18 லட்சம் கோடி ரூபாய் என்றும், வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய் என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கை

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-

தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது. ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த  கடனளவில்  ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி  அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.

தமிழத்தில் 2021ம் ஆண்டு ரூ. 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. 

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது.

வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாகும். 

தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது. 

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2.2 சதவீதமாக உள்ளது. குஜராத், மராட்டியம், கர்நாடகாவை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக குறைவாகும்.

தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஒவ்வொரு 1 ரூபாய் மூலதனச் செலவிற்கும் 2.26 ரூபாய் புதிய கடன் பெறப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறை ரூ.  72 ஆயிரத்து 667 கோடி கடனில் உள்ளது. 

தமிழகத்தின் மின்சாரத்துறைக்குதான் அதிக கடன் அளவு உள்ளது. மின்சாரத்துறைக்கு மட்டும் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி கடன் உள்ளது.

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை முழு விவரம்:-

ஆண்டுக்கு சராசரியாக, 14.30 சதவீதம் கடன் வளர்ந்து உள்ளது. ஆனால், மூலதன முதலீடு வெறும், 8.30 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அல்ல, அன்றாட கடன்களை சமாளிக்க கடன் வாங்குகிறோம் என்பது தெளிவான சான்று. ஒவ்வொரு நபர் மீதும் உள்ள கடன், 1.28 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தையும், ஒரு ரூபாய் கூட பொருளாதாரத்திற்கு பங்கு அளிக்கும் முன்பே, இந்த கடன் சுமையுடன் பிறக்கிறது.

கடன் வாங்கும் அளவு குஜராத், 17.6 சதவீதம், மஹாராஷ்டிரா 19.7 சதவீதம், கர்நாடகா, 23.40 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 28.30 சதவீதமாக அதிகமாக உள்ளது. தமிழக அரசின் வட்டி செலவு, 67,050 கோடி ரூபாயாக உயர்ந்து. மாநிலத்தின் மொத்த மூலதன திட்டமான, 50,911 கோடி ரூபாயை மிஞ்சியுள்ளது.

எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வட்டி செலுத்த, 1.32 ரூபாய் செலவாகிறது.

குஜராத் மாநிலம், வருவாய் உபரியுடன் செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா வருவாய் செலவு கணக்கில், சமநிலையை பேணுகின்றன. தமிழகம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் சென்று விட்டது. 

சொந்த வரி வருவாய்

கடந்த, 2021 - 22ல், 5.93 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய், 2025 - 26ல், 5.45 சதவீதமாக குறைந்துள்ளது. வணிக வரி துறையில் நிலவும் ஊழல் காரணமாக கணிசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை. சொத்து பதிவில் இழக்கும் வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் முத்திரைத்தாள் வருவாய் விகிதம் சரிவு பாதையில் உள்ளது. ஆயத்தீர்வை வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.

அதிக கனிம வள ஆதாரங்களை கொண்டிருந்த போதும், அந்த துறை வாயிலாக பெறப்படும் வருவாய் பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப்பகிர்வு குறைந்துள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தின் வாயிலாக வருவாய் இழப்புகளை சரிசெய்தல், அரசு கொள்முதலின் செலவை குறைத்தல், பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம், தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல், செலவு தரம், நேர்மையான, நம்பகமான வரவு செலவு திட்டமிடல் ஆகியவற்றின் வாயிலாக நிதிநிலைமை சரிசெய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முதியோர் வளர்ச்சி

தமிழகம், முதியோர் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் மாநிலமாக உள்ளது. கடந்த, 2011ல் முதியோர்களின் பங்கு, 10.60 சதவீதத்தில் இருந்து, 2031ல் 18.20 சதவீதமாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவிலேயே அதிக அளவாக, 71.70 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.

கலைஞர் உரிமை தொகை

கலைஞர் உரிமைத் தொகை திட்டம், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, இலவச பஸ், உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம், மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கு, 2025 - 26ல், ஆண்டு தொடர் செலவு, 25,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்கு இணையாக எவ்வித வருவாய் பெருக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...