புதன், 17 ஜூன், 2026

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. 

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில்   தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் 

முதல்-அமைச்சர் விஜய் - யின் உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.

தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை, சென்னையில் நேற்று, விஜய் அரசு வெளியிட்டது. தமிழகத்திற்கு முந்தைய தி.மு.க., அரசு வைத்து சென்றுள்ள கடன் சுமை, 13.18 லட்சம் கோடி ரூபாய் என்றும், வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய் என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கை

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-

தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது. ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த  கடனளவில்  ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி  அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.

தமிழத்தில் 2021ம் ஆண்டு ரூ. 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. 

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது.

வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாகும். 

தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது. 

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2.2 சதவீதமாக உள்ளது. குஜராத், மராட்டியம், கர்நாடகாவை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக குறைவாகும்.

தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஒவ்வொரு 1 ரூபாய் மூலதனச் செலவிற்கும் 2.26 ரூபாய் புதிய கடன் பெறப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறை ரூ.  72 ஆயிரத்து 667 கோடி கடனில் உள்ளது. 

தமிழகத்தின் மின்சாரத்துறைக்குதான் அதிக கடன் அளவு உள்ளது. மின்சாரத்துறைக்கு மட்டும் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி கடன் உள்ளது.

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை முழு விவரம்:-

ஆண்டுக்கு சராசரியாக, 14.30 சதவீதம் கடன் வளர்ந்து உள்ளது. ஆனால், மூலதன முதலீடு வெறும், 8.30 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அல்ல, அன்றாட கடன்களை சமாளிக்க கடன் வாங்குகிறோம் என்பது தெளிவான சான்று. ஒவ்வொரு நபர் மீதும் உள்ள கடன், 1.28 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தையும், ஒரு ரூபாய் கூட பொருளாதாரத்திற்கு பங்கு அளிக்கும் முன்பே, இந்த கடன் சுமையுடன் பிறக்கிறது.

கடன் வாங்கும் அளவு குஜராத், 17.6 சதவீதம், மஹாராஷ்டிரா 19.7 சதவீதம், கர்நாடகா, 23.40 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 28.30 சதவீதமாக அதிகமாக உள்ளது. தமிழக அரசின் வட்டி செலவு, 67,050 கோடி ரூபாயாக உயர்ந்து. மாநிலத்தின் மொத்த மூலதன திட்டமான, 50,911 கோடி ரூபாயை மிஞ்சியுள்ளது.

எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வட்டி செலுத்த, 1.32 ரூபாய் செலவாகிறது.

குஜராத் மாநிலம், வருவாய் உபரியுடன் செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா வருவாய் செலவு கணக்கில், சமநிலையை பேணுகின்றன. தமிழகம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் சென்று விட்டது. 

சொந்த வரி வருவாய்

கடந்த, 2021 - 22ல், 5.93 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய், 2025 - 26ல், 5.45 சதவீதமாக குறைந்துள்ளது. வணிக வரி துறையில் நிலவும் ஊழல் காரணமாக கணிசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை. சொத்து பதிவில் இழக்கும் வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் முத்திரைத்தாள் வருவாய் விகிதம் சரிவு பாதையில் உள்ளது. ஆயத்தீர்வை வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.

அதிக கனிம வள ஆதாரங்களை கொண்டிருந்த போதும், அந்த துறை வாயிலாக பெறப்படும் வருவாய் பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப்பகிர்வு குறைந்துள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தின் வாயிலாக வருவாய் இழப்புகளை சரிசெய்தல், அரசு கொள்முதலின் செலவை குறைத்தல், பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம், தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல், செலவு தரம், நேர்மையான, நம்பகமான வரவு செலவு திட்டமிடல் ஆகியவற்றின் வாயிலாக நிதிநிலைமை சரிசெய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முதியோர் வளர்ச்சி

தமிழகம், முதியோர் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் மாநிலமாக உள்ளது. கடந்த, 2011ல் முதியோர்களின் பங்கு, 10.60 சதவீதத்தில் இருந்து, 2031ல் 18.20 சதவீதமாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவிலேயே அதிக அளவாக, 71.70 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.

கலைஞர் உரிமை தொகை

கலைஞர் உரிமைத் தொகை திட்டம், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, இலவச பஸ், உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம், மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கு, 2025 - 26ல், ஆண்டு தொடர் செலவு, 25,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்கு இணையாக எவ்வித வருவாய் பெருக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...