பதிவு: செவ்வாய் கிழமை, ஜூன் 16, 2026, ஆனி 02, பாரபவ வருடம் 07:00 AM
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
முதல்-அமைச்சர் விஜய்அதன்படி, இன்று (16-ம் தேதி) மற்றும் நாளை (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,
“17-வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
நேரடி ஒளிபரப்பு
இந்த புத்தாக்க பயிற்சியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவை மரபுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக