பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 23, 2026, ஆனி 09, பாரபவ வருடம் 5.50 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார்.
தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.
கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 23 ஜூன், 2026
திங்கள், 22 ஜூன், 2026
முதல்-அமைச்சராக ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடும் ஜோசப் விஜய்... இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 22, 2026, ஆனி 08, பாரபவ வருடம் 3.50 AM
சென்னை,
'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கி உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழக வெற்றிக்கழகம்தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டினார்.
'விசில்' சத்தம்
விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2-வது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். லட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது.
அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை த.வெ.க. எதிர்கொண்டது.
விசில் சின்னத்துடன் கூட்டணியின்றி மக்களை சந்தித்த விஜய், 'உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் மக்கள் மனதை தொட்டது. அவர் பிரசாரத்திற்கு சென்ற, செல்லாத இடங்களிலும் 'விசில்' சத்தம் தெறிக்க விட்டது.
முதல்-அமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்திரையில் மட்டுமல்ல. தேர்தலிலும் விஜய் 'சர்க்கார்' அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கியது.
மே 10-ந்தேதி ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்று (திங்கட்கிழமை) 52-வது பிறந்தநாள்.
இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.
இன்று புதிய அறிவிப்புமுதல்-அமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ தொழிற்சாலையில் பரிதாபம் - அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 22, 2026, ஆனி 08, பாரபவ வருடம் 3.00 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்துள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் வாயு பரவியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்கள், 5 ஆண்கள் எனமொத்தம் 65 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு வாய், மூக்கு, கண், காதுகளில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. பெரியபாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்பெண்ணும், செங்குன்றம் அருகே உள்ள சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் ஒடிசாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
பெரிதும் பாதிப்புக்கு உள்ளான 7 தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் மற்றும் எம்எல்ஏக்கள் விஜயகுமார், ரவி, அருண்குமார் ஆகியோரும் மருத்துவமனைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர்.
இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழுவினர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
3 பேர் கைது
அமோனியா வாயு கசிவு தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொழிற்சாலை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,
‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்
விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்த வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
நச்சு வாயுவை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவி்த்துள்ளனர்.

ஞாயிறு, 21 ஜூன், 2026
தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 2026, ஆனி 07, பாரபவ வருடம் 3.00 AM
சென்னை,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இதையொட்டி, பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
வினாத்தாள் கசிந்தது
இதற்கிடையே, நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப் பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உட்பட 14 நாடுகள் என சுமார் 5,500 மையங்களில்நடைபெறும் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கெனவே வினாத்தாள் கசிந்துள்ளதால், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்கள் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வினாத்தாள்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
தேர்வு மையங்களில் சிசிடிவி: அதேபோல, அனைத்து நீட் தேர்வு மையங்களையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நீட் மறுதேர்வு பணிகளில் 2 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
வழக்கமாக, நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் தேர்வு நேரம் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த முறை கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட உள்ளனர். ஆள்மாறாட்ட மோசடியைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனையும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் அணிந்து வரவும், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 மொழிகளில் தேர்வு
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.

சனி, 20 ஜூன், 2026
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது - சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 20, 2026, ஆனி 06, பாரபவ வருடம் 1.00 AM
சென்னை,
சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றை மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலையும், மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியையும் மத்திய அரசு அளிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப் படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எனவே, மேகேதாட்டுவிலோ, காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றியும், மத்திய அரசின் அனுமதியின்றியும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ, அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்கீழ் புதிய நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது:
அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை, நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கான பிரச்சினை என்றால், எல்லா கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும். நமது விவசாயிகள், மக்களுக்காக நிற்க வேண்டியது நமது கடமை. நதிநீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வு அடிப்படையில், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது விவசாயிகள், தமிழக மக்களுக்காக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை ஒருமித்த கருத்துடன் அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, கொமதேக, மதிமுக, மமக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உதயநிதியின் கோரிக்கை ஏற்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் என்பதால், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது எனும் திருத்தத்தை சேர்க்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு முதல்வர் விஜய், ‘‘மேகேதாட்டு பிரச்சினை குறித்து எனது தலைமையில் கடந்த மே 26-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனி நடுவர் மன்றம் அமைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கருத்தை தனித் தீர்மானத்தில் கூடுதலாக சேர்க்கலாம்’’ என்றார். அதன்பிறகு, முதல்வர் முன்மொழிந்த திருத்தப்பட்ட தீர்மானம், பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்
முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

வியாழன், 18 ஜூன், 2026
“விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவுக்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்..” - கவர்னர் அர்லேகர்
பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 18, 2026, ஆனி 04, பாரபவ வருடம் 2.00 PM
சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காரில் புறப்பட்டார்.
வரவேற்பு
காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டசபை கூட்டம் தொடங்கியதுதொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தபடி, கவர்னர் அர்லேகர் சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வருகை தந்தார்.
அவருடன் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் உடன் வந்தார். சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் அர்லேகர் வந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர். .
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து, தனது உரையை கவர்னர் அர்லேகர் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விசில் புரட்சி
தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.
பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்.
சிங்கப்பெண் அதிரடிப்படைமாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் ஆகும். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும்.
போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரெயில்
தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.
இரு மொழிக் கொள்கை
தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
கடன் சுமைகடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.
ஒலிம்பிக் மையங்கள்மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை தவெக அரசு மேற்கொள்ள உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்.
கோவில் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்..மேகதாது அணைகர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும்.
சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதிப் பகிர்வு
மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்.
சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும்.
சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளைசென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.
முதலீடுகளை ஈர்க்க முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க AI பயன்படுத்தப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு கவர்னர் அர்லேகர் கூறினார்.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்
பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 18, 2026, ஆனி 04, பாரபவ வருடம் 06:00
சென்னை,
சட்டசபை கூட்டம் தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது.
புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.
சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும்.
இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
கவர்னர் உரைபேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில், கவர்னர் அர்லேகர் பங்கேற்று, உரையாற்றுவார்.
புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் அந்த உரையில் இடம் பெறும்.
இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்.
சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.
தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் கவர்னர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.
புதிய அறிவிப்புகள்
இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப் படும்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகள் திட்டம்அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளன.
இதனால் கேள்வி நேரத்தில் அனல் பறக்கும் கேள்விகள், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அதிரடி பதில்கள் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...