பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2026, வைகாசி, 31, பாரபவ வருடம் 06:00 AM
சந்திப்பூர்,
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணைகள், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகள் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) உள்ளன. இந்த வகை ஏவுகணைகள், பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே செல்லும். பின்னர் வளிமண்டலத்தில் இருந்து பூமிக்குள் அதிவேகமாக மீண்டும் நுழைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும்.
இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் நாடுகளிடம் மட்டுமே ஐசிபிஎம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தடுப்பு ஏவுகணைகள் உள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கடந்த 10, 11-ம் தேதிகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த 3 சோதனைகளும் முழு வெற்றி அடைந்துள்ளன. இவற்றில் ஒரு ஏவுகணை பூமிக்கு வெளியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மற்றொன்று பூமிக்குள் வந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்கும். மூன்றாவது போர்க் கப்பல்களை இடைமறித்து அழிக்கும் வல்லமை படைத்தது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘உலகில் சில நாடுகளிடம் மட்டுமே ஐசிபிஎம் ஏவுகணைகளை அழிக்கும் திறன் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. புதிய சாதனையைப் படைத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தியப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது:-
இந்தியாவின் பாதுகாப்புக்குச் சீனாவும் பாகிஸ்தானும் அச்சுறுத்தலாக உள்ளன. இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. பொதுவாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) மூலம் அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஐசிபிஎம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை திட்டத்தைக் கடந்த 1999-ம் ஆண்டில் டிஆர்டிஓ தொடங்கியது. பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து ஸ்வார்டுபிஷ் என்ற அதிநவீன ரேடார் வாங்கப்பட்டது.
இஸ்ரேல் அனுமதியுடன் இந்த ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் 1,500 முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையிலான எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஒரே நேரத்தில் 200 ஏவுகணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக டிஆர்டிஓ சார்பில் ஏடி1, ஏடி2 ஆகிய பெயர்களில் பிஎம்டி தடுப்பு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஸ்வார்டுபிஷ் ரேடார் மற்றும் பிஎம்டி ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும். தற்போது நடத்தப்பட்டு உள்ள சோதனைகள் மூலம் 5,000 கி.மீ. தொலைவில் இருக்கும் ஐசிபிஎம் ஏவுகணைகளை அழிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது.
4 அடுக்கு வான் பாதுகாப்பு
எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணை தாக்குதலை முறியடிக்க விமானப் படை சார்பில் 4 அடுக்கு வான் பாதுகாப்புக் கவசம் அமைக்கப்படுகிறது. முதல்கட்ட வான் பாதுகாப்பில், எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க இஸ்ரேல் தயாரிப்பான பைதன், டெர்பி ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.
இரண்டாவது அடுக்கில் எதிரிகளின் குறுகிய தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க பராக்-8 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். மூன்றாவது அடுக்கில் எதிரிகளின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நடுவானில் அழிக்க ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். நான்காவது அடுக்கில் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழிக்க பிஎம்டி ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். இந்த வகை ஏவுகணைகள் மூலம் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே எதிரிகளின் ஏவுகணைகள் தகர்க்கப்படும். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊக்கத்தொகை, உணவு வழங்கி 11 கிராம மக்கள் வெளியேற்றம்
இந்த சோதனைகள் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம், சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சந்திப்பூர் தளத்தில் அக்னி, பிருத்வி, பிரம்மோஸ் ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது சுற்று வட்டார கிராம மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.
இதேபோல டிஆர்டிஓவின் பிஎம்டி ரக ஏவுகணை சோதனைகளுக்காகச் சில நாட்களுக்கு முன்பு சந்திப்பூர் சுற்றுவட்டாரத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தங்குமிடம், குடிநீர், உணவுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
ஞாயிறு, 14 ஜூன், 2026
சனி, 13 ஜூன், 2026
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM
சென்னை,
நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் மட்டும் சராசரியாக5.48 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பு தென்மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது, பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்சியாக மட்டுமே உள்ளது.
எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்படி, வடிமுனைக் குழாய் கிணறுகள் (ஃபில்டர் பாயின்ட்ஸ்) மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.77.50 கோடி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.57.33 கோடி என மொத்தம் ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில், நெல் இயந்திரநடவு, நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள், தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தஉறுதுணையாகவும் அமையும்.
வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள ‘சி’, ‘டி’ வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர்வளத் துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள ‘ஏ’, ‘பி’ வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு, 97 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 டன் நெல் விதைகள், 4.02 லட்சம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும். எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 ஜூன், 2026
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு, கோவையில் 2-வது எய்ம்ஸ் - நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 12, 2026, வைகாசி, 29, பாரபவ வருடம் 05:30 AM
புதுடெல்லி,
நிதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்.
வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தரவேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திட்ட கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விஜய் (தமிழகம்), சிவகுமார் (கர்நாடகா), சதீசன் (கேரளா), சுவேந்து அதிகாரி (மேற்கு வங்கம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) உட்பட 28 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் சார்பில் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.
ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங்சவுகான், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, குமாரசாமி, தர்மேந்திரபிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறை.
வளர்ச்சி அடைந்த இந்தியா
‘வளர்ந்த இந்தியா@2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு’ என்ற கருப்பொருளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது..
இக்கட்டான சூழலிலும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா தன்னம்பிக்கையுடன் வேகமாக முன்னேறிச் செல்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக பொருட்களை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்களித்து வருகின்றனர். அவர்களது கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பேசினர். தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது...
அதிகாரம் அளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவு கூட்டாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாகமட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும். 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் இளைஞர் திறன், வேலை வாய்ப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தர வேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக விளங்கும் திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும்.
நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம், மக்கள்தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறப்பான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது ஆகும். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு நிலுவை நிதியை விரைந்து வழங்க கோரிக்கை
தேசிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை திணிக்காமல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். ‘வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்’, ‘அனைவருக்கும் வீடு’ திட்டங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்-2045, ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டத்துக்கான ரூ.2,283 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.
இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தை ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் திட்டம், செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி – கரூர், கரூர் –கோவை, சென்னை மாதவரம் – சோழவரம் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

வியாழன், 11 ஜூன், 2026
இந்திய பிரதமராக நீண்ட காலம் பணியாற்றி சாதனை - பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து
பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 11, 2026, வைகாசி, 28, பாரபவ வருடம் 01:30 AM
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் பணியாற்றி இந்த சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு, 4,398 நாட்கள் பணியாற்றியது சாதனையாக இருந்தது. இந்த சூழலில் ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ள எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.
அவர் மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் கொண்டவர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவார்” என்று ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இச்சாதனை நமது தேசத்தின் சரித்திரத்தில் பெரும் மைல்கல் என்று கூறியுள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதத்தின் நீண்ட நெடிய பயணத்தின் முக்கிய அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது மக்கள் சேவையாற்றும் மக்களின் தலைவருக்கு நாட்டு மக்கள் அளித்துள்ள மகுடம் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலனை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வளர்ச்சியின் பயன்களைப் பெறாமலிருந்த விளிம்புநிலை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் நேரடியாக கிடைக்க வகை செய்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேலும் பல ஆண்டுகள் வெற்றியுடன் திகழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் முதன்மை நாடாக இந்திய தலைமையேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

புதன், 10 ஜூன், 2026
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” - முதல்வர் விஜய் எச்சரிக்கை - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் பேச்சு
பதிவு: புதன்கிழமை, ஜூன் 10, 2026, வைகாசி, 27, பாரபவ வருடம் 05:30 AM
சென்னை,
“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்த அவர், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பி, மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் பெண் எஸ்.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.
பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் முதலிலும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், இன்று நடைப்பெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது.
விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை லட்சினையை முதல்வர் வெளியிட ஐ.ஜி பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய்யே இயக்கி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய், “ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அந்த மாதிரியான நிகழ்ச்சிதான் இன்றைய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா. நம் பாட்டி, அம்மா, தங்கைகள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சொன்னோம். அது தேர்தலுக்காக சொன்னது இல்லை, மனதிலிருந்து உண்மையாக சொன்னதுதான்.
பெண்களுக்கான பாதுகாப்பில் எப்போதும் ஜீரோ டாலரன்ஸ் தான். அதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் சொன்னது எல்லாவற்றையும் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வருவோம், அதில் தெளிவாக உள்ளோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்த உடனே இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழக பெண்கள் பாதுகாப்பாக, தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதற்கான முதல்படி தான் இது. பெண்களுக்கு நடக்கும் இன்றைய கொடுமைகளை பார்க்கும்போது மனது பதறுகிறது, கண்கள் கலங்குகிறது. அவர்கள் எல்லாம் நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே. இதற்கான காரணத்தை ரீல்ஸில் தேட முடியாது உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கொடுமைகள் நடக்க காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான். இதனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இது இப்போது மே 10-ம் தேதி முதல் இருக்கும் பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை. போதைப்பொருள் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் விட்டதுதான், அந்த வேர் இவ்வளவு பரவுவதற்கு காரணம். இதனை கண்டுகொள்ளாமல் விட்டது யார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதனைப் பற்றி பேசி இப்போது பிரயோஜனம் இல்லை. முதலில் இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதியாகும். அப்போதுதான் சட்டம் - ஒழுங்கும் சரியாகும்.
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்று ஒன்று தொடர்புடையது. பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை, இதில் சமூக ஒழுங்கும், தனிமனித கட்டுப்பாடும் சம்பந்தப்பட்டது. தனிமனிதன் ஒழுங்காக கட்டுப்பாட்டோடு இருந்தாலே சமூகமும் நன்றாக மாறும். பெண்கள் பயமில்லாமல் வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும். அந்த வேகத்தில் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்பதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.
இந்த திட்டத்துக்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்பே, அதனை தடுக்கும் பணியில் இந்தப் படை ஈடுபடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ட்ரோன் முறையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓர் அரசின் நோக்கம் நேர்மையாக இருந்தாலே போதும், அந்த அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்” என்று முதல்வர் விஜய் பேசினார்.

செவ்வாய், 9 ஜூன், 2026
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் - இண்டியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தல்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 09, 2026, வைகாசி, 26, பாரபவ வருடம் 04:50 AM
புதுடெல்லி,
இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இண்டியாகூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இண்டியா கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 23 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 5 அம்சங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஒருமித்தகருத்து எட்டப்பட்டது.
விலைவாசி உயர்வு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) வாக்கு திருட்டு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விரைவில் தலைமை நீதிபதியிடம் கடிதம் அளிக்கப்படும். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
தற்போதைய பொருளாதார சூழல், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டியா கூட்டணி கூட்டத்தை நடத்த அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி, லோக் தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், சேக்தாரி காம்கர் பக்சா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “நாங்கள் இண்டியா கூட்டணியில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

வியாழன், 21 மே, 2026
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.
தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
பதிவு: புதன்கிழமை, ஜூன் 17, 2026, ஆனி 03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...