சனி, 9 மே, 2026

மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 06:00 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  

காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.  

கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.  

இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.  

அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை.  அவர் விலை போய் இருக்கலாம் என்றார்.  விஜய் பதவி வெறியில் இருக்கிறார்.  த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறினார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.  இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர்.  

காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  

அக்கடிதம் போலியானது.  காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.

உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.  அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை.  நீங்கள் தூய சக்தி.  தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.  ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர்.  

உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.  மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர்.  ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை.  இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம்.

அந்த கடிதங்களை ஆராய வேண்டும்.  அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.  மீண்டும் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.  

தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார்.  அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார்.

மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர். . அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது.

த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது.  உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.

மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர்.  த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன்.  தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார்.  

போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.  

இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல் நீடிப்பு

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 05:10 AM

சென்னை,

தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு 2 இடங்கள் தேவைப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. 

த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆட்சி அமைப்பதற்கு த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. 

தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. 

மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். 

அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து விஜய் இன்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார். 

அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இதையடுத்து நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது. 

இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன. 

இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி - 2,639 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்று சாதனை

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 04:30 AM

சென்னை,

தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய 7.92 லட்​சம் மாணவ, மாணவி​களில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். வழக்​கம்​போல, மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர்.

489 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 2,639 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் இந்த ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்​களில் நடை​பெற்​றது. பதிவு செய்த 7 லட்​சத்து 99,528 மாணவ, மாணவி​களில் 7 லட்​சத்து 91,654 பேர் தேர்வு எழு​தினர். 7,874 பேர் (0.98%) பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளி​யிட்​டார். தொடர்ந்​து, தேர்​வுத் துறை இணை​யதளத்​தி​லும் முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. 

மாணவர்​களின் செல்​போன் எண்ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக​வும் (எஸ்​எம்​எஸ்), பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சலிலும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு விவரங்​கள் அனுப்​பப்​பட்​டன. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூல​மாக​வும் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழு​தி​ய​தில் 7 லட்​சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (95.03%) இது 0.17 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 97 சதவீத​மும், மாணவர்​கள் 93.19 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை​விட மாணவி​கள் 3.81 சதவீதம் அதி​கம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்​தில் மாணவி​களே முன்​னிலை வகிக்​கின்​றனர்.

அரசுப் பள்ளி மாணவர்​கள் 1,695 பேர் உட்பட மொத்​தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்​தில் 100 மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றுள்​ளனர். மாவட்ட அளவி​லான தேர்ச்​சி​யில் 98.87 சதவீதத்​துடன் ஈரோடு முதலிடம் பெற்​றுள்​ளது. சிவகங்கை (98.05%), கன்​னி​யாகுமரி (97.63%) மாவட்​டங்​கள் அடுத்த 2 இடங்​களில் உள்​ளன. கடைசி இடத்​தில் விழுப்​புரம் (85.92%) உள்​ளது. 

தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்​ளது. அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் ஈரோடு (98.24%) மாவட்​டம் முதலிடத்​தில் உள்​ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்​கடுத்த 2 இடங்​களைப் பிடித்​துள்​ளன. விழுப்​புரம் (82.10%) மாவட்​டம் கடைசி இடத்​தில் உள்​ளது. இத்​தேர்​வில் 7,536 பள்​ளி​களைச் சேர்ந்த மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். இதில் 489 அரசுப் பள்​ளி​கள் உட்பட 2,639 பள்​ளி​கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

தனி​யார் பள்​ளி​களின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலை​யில் தற்​போது 98.72% ஆக குறைந்​துள்​ளது. அதே​நேரம், அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்​டை​விட சற்று உயர்ந்​துள்​ளது.

25,521 தனித் தேர்​வர்​களில் 6,171 பேர் (24%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றனர். 8,855 மாற்​றுத்திறன் மாணவர்​களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதி​களில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்ளனர். பிளஸ் 1 வகுப்​பில் தனித் தேர்​வர்​களாக 20,444 பேர் தேர்வு எழு​தி​ய​தில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்​வுத் துறை இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) தற்​காலிக மதிப்​பெண் பட்​டியல் மே 13-ம் தேதி வெளி​யிடப்​படு​கிறது. மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் வாயி​லாக​வும், தனித் தேர்​வர்​கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் மூல​மாக​வும் மதிப்​பெண் பட்​டியலை பெற்​றுக் கொள்​ளலாம். அசல் மதிப்​பெண் சான்​றிதழ் ஜூன் மாதம் வழங்​கப்​படும். விடைத்​தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஜூனில் துணைத் தேர்வு

பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை தவற​விட்​ட​வர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியைத் தொடர ஏது​வாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். மறும​திப்​பீடு, மறுகூட்​டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தேர்​வுத் துறை தெரி​வித்​துள்​ளது.

கட்​ஆஃப் குறை​யும்

பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்கு பிர​தான​மான கணிதம், இயற்​பியல், வேதி​யியல் பாடங்​களில் மாணவர்​களின் தேர்ச்சி கடந்த ஆண்​டை​விட சற்று குறைந்​துள்​ளது. தவிர, முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்​துள்​ளது. கடந்த 2025-ல் வேதி​யியல் 3,181, கணிதம் 3,022, இயற்​பியல் 1,125 பேர் என ‘சென்​டம்’ பெற்ற நிலை​யில், தற்​போது வேதி​யியல் 632, கணிதம் 732, இயற்​பியல் 105 பேர் என குறைந்​துள்​ளது.

இதனால், கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது கட்​ஆஃப் 180-200 பிரி​வில் 2 முதல் 4 வரை​யும், 160-179 பிரி​வில் 6 முதல் 8 வரை​யும் மதிப்​பெண் குறை​யும். இதுத​விர, நீட் தேர்வு தேவைப்​ப​டாத கால்​நடை மருத்​து​வம் போன்ற இதர மருத்​து​வப் படிப்​பு​களுக்​கும் கட்​ஆஃப் மதிப்​பெண் கணிச​மாக குறை​யும் என்று கூறப்​படு​கிறது.

மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100

 பாட​வாரி​யாக 100-க்கு 100 பெற்​றவர்​களின் எண்​ணிக்கை:

தமிழ் - 83

ஆங்​கிலம் - 21

இயற்​பியல் - 105

வேதி​யியல் - 632

உயி​ரியல் - 784

கணிதம் - 732

தாவர​வியல் -31

விலங்​கியல் - 18

கணினி அறி​வியல் - 6,945

வணி​க​வியல் - 683

கணக்​குப் பதி​வியல் - 1,946

பொருளா​தா​ரம் - 440

வரலாறு - 282

புவி​யியல் - 42

கணினி பயன்​பாடு​கள் - 2,099

வணி​க கணிதம்​ மற்றும்

புள்​ளி​யியல் - 463

புள்​ளி​யியல் - 17

மனை​யியல் - 6

கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்

 பிளஸ் 2 தேர்​வில் கணினி அறி​வியல் பாடத்​தில் தேர்ச்சி வீதம் அதி​க​மாக​வும், பொருளா​தார பாடத்​தில் குறை​வாக​வும் காணப்​படு​கிறது. தேர்ச்சி வீதம் வரு​மாறு:

மொழிப்​பாடம் - 98.96%

ஆங்​கிலம் - 98.74%

இயற்​பியல் - 98.87%

வேதி​யியல் - 98.82%

உயி​ரியல் - 99.49%

கணிதம் - 99.12%

தாவர​வியல் - 98.62%

விலங்​கியல் - 98.69%

கணினி அறி​வியல் - 99.84%

வணி​க​வியல் - 97.55%

கணக்​குப் பதி​வியல் - 98.94%

வரலாறு - 97.90%

புவி​யியல் - 99.32%

புள்​ளி​யியல் - 99.58

பொருளா​தா​ரம் - 97.54%

மனை​யியல் - 96.89%

பாடப் பிரிவு​கள் (குரூப்) வாரி​யாக தேர்ச்சி வீதம்:

அறி​வியல் பிரிவு - 96.90%

வணி​க​வியல் - 92.67%

கலை - 85.19%

தொழிற்​பாடம் - 85.97%​

மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)

ஈரோடு 98.87

சிவகங்கை 98.05

கன்னியாகுமரி 97.63

திருநெல்வேலி 97.54

திருச்சி 97.50

தூத்துக்குடி 97.24

தஞ்சாவூர் 97.19

தென்காசி 97.18

விருதுநகர் 97.17

நாமக்கல் 97.04

திருப்பூர் 97.03

ராமநாதபுரம் 96.70

கோவை 96.66

சேலம் 96.61

கரூர் 96.20

மதுரை 96.13

திண்டுக்கல் 95.92

புதுக்கோட்டை 95.88

கடலூர் 95.57

சென்னை 95.43

காஞ்சிபுரம் 95.31

தேனி 95.27

பெரம்பலூர் 94.53

நாகப்பட்டினம் 94.38

கள்ளக்குறிச்சி 94.26

நீலகிரி 94.13

திருவள்ளூர் 94.11

திருப்பத்தூர் 93.68

மயிலாடுதுறை 93.51

தருமபுரி 93.49

செங்கல்பட்டு 93.25

தி.மலை 92.87

அரியலூர் 91.70

கிருஷ்ணகிரி 91.31

திருவாரூர் 91.00

வேலூர் 90.73

ராணிப்பேட்டை 88.20

விழுப்புரம் 85.92















வெள்ளி, 8 மே, 2026

தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 06:00 AM

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். 

இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது. 

இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதன்படி, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  

தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.  

பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். 

அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் அடுத்த முதல்​வர்? - ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 04:25 AM

சென்னை,

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்​டிலில் அமர முடி​யாமல் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார் விஜய். எனினும் அறு​திப் பெரும்​பான்​மைக்கு மிக அரு​கில் நிற்​ப​தால் எப்​படி​யும் விஜய் தமிழக முதல்​வ​ரா​வார் என தவெக-​வினர் நம்​பு​கிறார்​கள். இதற்கு நடு​வே, அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்​வந்​திருப்​ப​தாக​வும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்று ஆளுநரை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்​றும் தகவல்​கள் தடதடக்​கின்​றன.

திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் அதி​முக. இந்த இரண்டு கட்​சிகளும் எதிரெ​திர் துரு​வங்​களாக நிற்​பது​தான் இரண்டு கட்​சிகளுக்​குமே நல்​லது. அப்​படி இருப்​ப​தால் மட்​டுமே கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த இரண்டு கட்​சிகள் மட்​டுமே மாறி மாறி ஆட்​சி​யைப் பிடித்து வரு​கின்​றன. இதனால் இவர்​களிடம் ஐம்​பது வருடங்​களுக்கு முன்பு ஆட்​சியை பறி​கொடுத்த காங்​கிரஸால் அதற்​குப் பிறகு எழவே முடிய​வில்​லை.

இந்த நிலை​யில்​தான், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக பாஜக தமிழகத்​தில் தலை​தூக்​கியது. ஆனால், அந்​தக் கட்​சி​யாலும் இப்​போது வரைக்​கும் திரா​விடக் கட்​சிகள் தயவில்​லாமல் முன்​னுக்கு வரமுடிய​வில்​லை. என்​ற​போதும், விஜய்​யின் வரவால் இம்​முறை திரா​விடக் கட்​சிகளின் தலைமை இல்​லாத ஓர் அரசாங்​கம் தமிழகத்​தில் அமை​யும் சூழல் உரு​வாகி இருக்​கிறது. காங்​கிரஸ், பாஜ கட்​சிகளால் சாதிக்க முடி​யாத இந்த அதிச​யத்தை சாதித்​துக் காட்டி இருக்​கிறார் விஜய்.

இருந்த போதும் அறு​திப் பெரும்​பான்​மைக்​காக, இப்​போது திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற கட்​சிகளின் தயவை நாடி நிற்​கிறார் விஜய். இது தொடர்​பாக தவெக தரப்​பில் இருந்து கம்​யூனிஸ்ட் தலை​வர்​களிடம் பேசி வரு​கிறார்​கள். அதேபோல் பழைய பாசத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவனிடம் நேற்று முன்​தினம் மாலை ஆதவ் அர்​ஜுனா நேரடி​யாகவே பேசி இருக்​கிறார். 

முதலில் ஆலோ​சித்து முடிவை தெரி​விப்​ப​தாக சொன்ன திரு​மாவளவன், இரவு 8 மணிக்​குமேல் ஆதவ் தரப்​பில் இருந்து தொடர்பு கொண்​ட​போது வேறு​வித​மாக பதில் சொல்லி இருக்​கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்​புக்கு பிடி​கொடுக்​க​வில்​லை. என்றாலும் விஜய்யை ஆட்​சி​யமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்​சிகளுமே வலி​யுறுத்தி வரு​கின்​றன. அதே​நேரத்​தில், இந்​தக் கட்​சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்​டும் என ஸ்டா​லின் வேண்டுகோள் விடுத்​திருக்​கிறார்.

விசிக, கம்​யூனிஸ்ட்​களின் ஆதர​வுக்கு பங்​கம் வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே பாமக தரப்​புடன் அதி​காரப்பூர்வ பேச்சுவார்த்தை எது​வும் நடத்​த​வில்லை தவெக. இருப்​பினும் இரண்டு தரப்​பிலும் சிலர் நட்பு ரீதி​யில் பேசி​ய​போது, தங்​களுக்கு துணை முதல்​வர் பதவியை தரு​வதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்​டும் என்​றும் பாமக தரப்​பில் கோரிக்கை வைத்​த​தாகச் சொல்​கிறார்​கள். இதற்கு சாத்​தி​யமில்லை என்​ப​தால் மேற்​கொண்டு இதுபற்றி தவெக தரப்​பில் பேச்​சு​வார்த்​தையை தொடர​வில்லை என்​கிறார்​கள்.

இப்​படி​யான சூழலில்​தான், திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்​சி​யமைக்க ஆலோ​சனை நடப்​ப​தாக நேற்று முன்​தினம் ஒரு செய்தி காட்​டுத் தீயாய் கசிந்​தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்​கப்​பட்​டிருந்த போலீஸ் கான்​வாய் விலக்​கப்​பட்​டதும் பல்​வேறு ஊகங்​களுக்கு வழி​வகுத்​தது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர், “இந்​தத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோற்​றதை​விட தனது தந்தை ஸ்டா​லின் தோற்​றதை உதயநிதி ஸ்டா​லி​னால் ஜீரணித்​துக் கொள்ள முடிய​வில்​லை. என்ன விலை கொடுத்​தாவது இதை சரிசெய்ய வேண்​டும் என்​

ப​தில் தீவிர​மாய் இருக்​கிறார் உதயநி​தி. அதி​முக உடன் திமுக கைகோர்க்​கிறது என்ற செய்​தி​யும் உதயநிதி தரப்​பில் இருந்தே கசிந்​திருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுனுடன் நேற்று முன்​தினம் உதயநிதி பேசி​ய​தாக​வும் சொல்கிறார்​கள்.

திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக காலூன்றி இருக்​கும் விஜய், ஆட்​சி​யில் அமர்ந்​தால் திரா​விடக் கட்​சிகளில் ஒன்று நிச்​ச​யம் காணா​மல் போய்​விடும். ஏற்​கெனவே கரைந்து கொண்​டிருக்​கும் அதி​முக அந்த இடத்​துக்கு தள்​ளப்பட நிறையவே வாய்ப்​பிருக்​கிறது. 

இதையெல்​லாம் உணர்ந்​தே, அதி​முக தரப்​பிலும் ‘தி​முக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி’ என்ற செய்​தி​களை யாரும் மறுக்​க​வில்​லை. மாறாக, “118 எம்​எல்​ஏ-க்​கள் ஆதர​வுடன் ஆளுநரை சந்​திப்​பார் பழனி​சாமி” என திட​மாகச் சொல்லி இருக்​கிறார் புதுச்​சேரி மாநில அதி​முக அமைப்​பாளர் அன்​பழகன்.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு பதில் சொன்ன அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் செம்​மலைகூட, “தி​முக ஆதரவு குறித்து பொதுச் செய​லா​ளர் முடி​வெடுப்​பார்” என்​று​தான் சொல்லி இருக்​கிறார்.

திமுக - அதி​முக ஆட்சி குறித்த செய்​தி​களை டெல்லி பாஜக தலை​மை​யும் ரசிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. அதற்​குக் காரணம், விஜய்க்கு காங்​கிரஸ் ஆதர​வுக் ‘கரம்’ நீட்டி இருப்​பது. விஜய் செல்​வாக்​கில் தமிழகத்​தில் மீண்​டும் காங்​கிரஸ் தலை​தூக்கி விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறது பாஜக. அதன் காரண​மாகவே, அறு​திப் பெரும்​பான்மை எம்​எல்​ஏ-க்​களின் பட்​டியலைக் கேட்டு விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இழுத்​திருக்​கிறார் ஆளுநர்.

விஜய் ஆட்​சிக்கு வராமல் தடுப்​ப​தற்​காக பழனி​சாமியை வெளி​யில் இருந்து ஆதரிக்​கும் முடிவுக்கு திமுக வந்​திருப்​ப​தாக சொல்​பவர்​கள், “இது தொடர்​பாக டெல்​லி​யின் அனு​ம​தி​யோடு அதி​முக சில மூவ்​களை எடுத்து வரு​கிறது. அதன்​படி நேற்றே பழனி​சாமி ஆளுநரை சந்​திப்​ப​தாக இருந்​தது. 

ஆனால், விஜய்க்கு சாக்​குப் போக்கு சொல்​லிக் கொண்​டிருந்​த​தால் நேற்று ஆளுநர் - பழனி​சாமி சந்​திப்பு நடக்​க​வில்​லை. 

புதுச்​சேரி சென்ற பழனி​சாமி அங்கு தங்​கவைக்​கப்​பட்​டுள்ள அதி​முக எம்​எல்​ஏ-க்​களிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். திமுக ஆதரவு குறித்து அப்​போது பேசப்​பட்​ட​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்​து, இன்று திமுக ஆதரவு கடிதத்​துடன் ஆளுநரை பழனி​சாமி சந்​திக்​கக் கூடும் என தெரி​கிறது.

விஜய்க்கு ஆட்​சி​யமைக்க வாய்ப்பு அமை​யாத காரணத்​தால் நாங்கள் பழனி​சாமிக்கு நிபந்​தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்​பில் விளக்​கம் கொடுக்​கப்​படலாம். தங்​களின் இந்த முடி​வால் விஜய்யை ஆட்​சி​யமைக்க முடி​யாமல் தடுத்​து​விட முடி​யும் என நம்​பு​கிறார் உதயநி​தி. 

அதே​போல், பழனிசாமி​யும் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​று​வ​தால் அதி​முக-வை பிள​வில் இருந்து காப்​பாற்ற முடி​யும் என நினைக்​கிறார்” என்கிறார்​கள்.

யாருமே நினைத்​துக்​கூட பார்க்க முடி​யாத அதி​முக ஆட்சி திமுக ஆதர​வில் அமை​யு​மா... திமுக எதிர்ப்​பிலேயே வளர்ந்த அதி​முக-​வின் எம்​எல்​ஏ-க்​கள் அத்​தனை பேரும் ஒரே​முக​மாய் இதை ஏற்​பார்​களா... அல்​லது திமுக உறவை காரணம் காட்டி அதி​முக-​வில் பிளவு ஏற்​படுமா என்ற கேள்வி​களுக்கு எல்​லாம் விடை தெரி​யும் நாள் வெகுதூரத்​தில் இல்​லை.

தவெக தலைவர் விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு - 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 03:50 AM

சென்னை,

திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சி தீவிரம்

 சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர். 

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.

சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். 

அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். 

கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அழைக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம் 

 ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் 2-வது நாளாக நேற்றும் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்றும், அழைக்கவில்லை என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 

இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 7 மே, 2026

திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை - தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமையுமா?

பதிவு: வியாழக்கிழமை,  மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 04:25 AM

சென்னை,

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. 

அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.

புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

அதாவது, தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தவெகவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7-ம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது. 

எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆளுநர் எம்எல்ஏ.க்களின் முழு பட்டியலைக் கேட்டுள்ளதால், அதை தயாரித்து வழங்கும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பிய விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஓரிரு தினங்களில் முழு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விஜய் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

அதன்பின்னர் நேற்று இரவு தவெக சட்ட ஆலோசனைக் குழுவினர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்துப் பேசினர். 

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...