பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 08:00 AM
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும்.
அதன்படி, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.
இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது.
நேற்று மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடந்தது. இதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் 18-ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன.
அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா...' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். சகல பரிவாரங்கள் முன்செல்ல பக்தர்க ளுக்கு காட்சி அளித்தபடி வந்தார்.
பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.
அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர்.
அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர்.
அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு வழிபாடுகளுக்கு பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார்.சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 494 மண்டகப்படி களில் இந்தாண்டு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை மறுநாள் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோலங்களில் காட்சி தருகிறார்.
3-ந்தேதி இரவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும்.
4-ந் தேதி மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி புறப்படுகிறார்.
5-ந் தேதி காலையில் இருப்பிடம் செல்கிறார்.
6-ந்தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
வியாழன், 30 ஏப்ரல், 2026
செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 04:30 AM
சென்னை,
மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கடந்த 2021-23 கால கட்டத்தில் தமிழகத்தில் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி, கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசனும், சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சேலம் இ.சரவணன், உசிலம்பட்டி ராஜ்குமார் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடந்து வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், இ.சரவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ராஜ்குமார் தரப்பில் வழக்கறிஞர் வேதவிகாஸ் ஆகியோரும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டான்ஜெட்கோ தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி.குமரேசன் ஆகியோரும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பு விவரம்:
புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையும், ஊழல் தடுப்பு ஆணையமும் முறையாக விசாரிக்கவில்லை. செந்தில் பாலாஜி, ராஜேஷ் லக்கானி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், காசிக்கு எதிராக மட்டும் விசாரணை நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை 20 மாதங்களாக நடத்தியுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட யார் மீதும் வழக்கு பதியவில்லை.
சுதந்திரமான விசாரணை தேவை என்பதால் சிபிஐக்கு மாற்றுகிறோம். விசாரணைக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை ஒத்துழைப்பு தரவேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து ஆவணங்களையும் 2 வாரங்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘‘மின்மாற்றிகள் கொள்முதலில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை’’ என கோவையில் செந்தில் பாலாஜி நேற்று கூறினார்.

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு - தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 01:10 AM
சென்னை,
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்டிடிவி ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ (NDTV's Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அக்னி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ (chanakya strategies) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேட்ரிஸ்’ (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரிபப்ளிக்-பி மார்க்’ (Republic-P Mark) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65-85 தொகுதிகளிலும், தவெக 16-26 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆக்ஸிஸ் மை இண்டியா’ (Axis My India) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டைம்ஸ் நவ் - ஜேவிசி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி நடந்து முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிந்தது.
மேற்குவங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 85.1% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

புதன், 29 ஏப்ரல், 2026
தவெக தலைவர் விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் - விமான நிலையத்தில் ரசிகர்கள் வரவேற்பு
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 04:50 PM
கோபர்கான்,
தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட விஜய், தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், இன்று மராட்டிய மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் சென்ற விஜய் அங்கு இருந்து கோவிலுக்கு கார் மூலமாக சென்றார். விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.
கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 10:50 AM
திண்டுக்கல்,
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார்.
அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்றும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் மற்றும் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதில் ஒரு சிறுமி, தி.மு.க. வெல்லட்டும் என்ற பாடலை பாடி காட்டினார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பின்னர் திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் சவாரி மேற்கொண்டார்.
பின்பு ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்தினார்.
அங்கு இருந்த தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.
தனியார் ஓட்டலில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வணக்கம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிறார்.
இதனிடையே நேற்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் - மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 07:15 AM
மதுரை,
மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது.
தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்து வருகின்றனர்.
பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர்.
அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார்.
வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.
இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு - கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல் - 1.88 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 01:45 AM
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 இடங்களில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தர்லவாடா பகுதியில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஒரு கிகாவாட்டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்பட்டினத்தில் 2028-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், தர்லவாடாவில் 266.6 ஏக்கரிலும், பின்னர் அடவிவரம் பகுதியில் 160 ஏக்கரிலும், அனகாபல்லி மாவட்டம் ராம்பில்லி அருகே 174.80 ஏக்கரிலும் இந்த டேட்டா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையம் கட்டப்படும்போதே சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
கேம் சேஞ்சர்
விசாகப்பட்டினத்துக்குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்பது ஒரு கேம் சேஞ்சர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: விசாகப்பட்டினத்துக்கு மட்டுமல்ல, ஆந்திராவுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்சர்தான்.
ஆந்திர வரலாற்றில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகும். இதனால் நான் மத்திய அரசுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆந்திராவின் பங்கு மிக முக்கியமாக மாற உள்ளது. சர்வதேச டேட்டா நுழைவு வாயிலாக ஆந்திரா இருக்கும். மேலும் பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வர உள்ளன. இந்த மையம் 2028 நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும். வரும் ஜூலை மாதத்தில் போகாபுரம் விமான நிலையத் திறப்பு விழா நடைபெற உள்ளது. நாங்கள் நிறுவனங்களுடன் வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமே செய்வதில்லை. அதை முனைப்புடன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் குறியாக உள்ளோம். இதனால்தான் பல நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முன்வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஏஐ பட்டினம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது....
நாடே பெருமிதம் அடையும் விதத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஒரு சைபராபாத் நகரை உருவாக்கி அதை தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக மாற்றி சாதனை படைத்தவர் சந்திரபாபு நாயுடு.
தற்போது விசாகப்பட்டினம் வருங்காலத்தில் ஏஐ பட்டினமாக மாறும் விதமாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர்கள்.
இளைய சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர் அமைச்சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்சிகளால் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.
எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது. செமி கண்டக்டர் தயாரிப்பில் நம் நாடு முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு டாலர் மதிப்புள்ள ‘சிப்’ கிடைக்காவிடில், மில்லியன் டாலர் பொருட்களின் உற்பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்திராவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே பணிகள் ஆந்திராவில் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்திராவில் ‘தென் கடலோர ரயில்வே வட்டம்’ தொடங்கப்பட உள்ளது. விரைவில் புல்லட் ரயில்கள் தென் இந்திய மாநிலங்களில் பறக்க உள்ளன.
இதனால், சென்னை, அமராவதி, ஹைதராபாத், பெங்களூரு நகரங்கள் பயனடைய உள்ளன. அமராவதியில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 70 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மாநில அமைச்சர் லோகேஷ், கூகுள் நிறுவன பிரதிநிதிகள் உட்பட மேலும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
பதிவு: புதன்கிழமை, ஜூன் 17, 2026, ஆனி 03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...