பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 04:00 AM
சென்னை,
மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், 720 கிராம் தங்கம் உள்ளதாகவும், கையிருப்பில் ரூ.40 ஆயிரம் உள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினிடம் ரூ.10 ஆயிரம் கையிருப்பு பணம் உள்ளதாகவும், அவரின் வருவாய்க்கான ஆதாரம் எம்.எல்.ஏ. ஊதியம், வங்கி வைப்பு நிதி வட்டி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் பெயரில் குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவிக்கு எந்த கடன்களும் இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் பெயரில் தஞ்சை அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், திருவாரூரில் ரூ.1.12 கோடி மதிப்பில் நிலம் உள்ளதாகவும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக