புதன், 13 மே, 2026

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து - சிபிஐ தீவிர விசாரணை


 பதிவு: புதன்கிழமை,  மே 13, 2026, சித்திரை, 30, பாரபவ வருடம் 02:55 AM

புதுடெல்லி,

வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர். இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். 

அந்த அமைப்​பு​கள் விசா​ரணை நடத்தி என்​டிஏ​விடம் விரி​வான அறிக்​கையை சமர்ப்​பித்​தன. அதன் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மறு​தேர்வு தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

நீட் மறு​தேர்​வுக்​குப் புதி​தாக ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தேர்​வுக் கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். ஏற்​கெனவே செலுத்​திய தேர்​வுக் கட்​ட​ணம் திரும்ப வழங்​கப்​படும். என்​டிஏ-​வின் சொந்த நிதி​யில் மறு​தேர்வு நடத்​தப்​படும். 

மாணவ, மாணவி​கள் ஏற்கெனவே எழு​திய தேர்வு மையங்களில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மறு​தேர்​வுக்​கான தேதி, ஹால் டிக்​கெட் குறித்து என்​டிஏ சார்பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும்.

மேலும் விவரங்​களுக்கு neet-ug@nta.ac.in இ-மெ​யில் முகவரி மற்​றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

தேசிய தேர்வு முகமை தலை​வர் சுபோத் குமார் சிங் கூறும்​போது, “மாணவ, மாணவி​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்க ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். முறை​கேடு​களில் ஈடு​படு​பவர்​கள் அகற்​றப்​படு​வார்​கள். வலு​வான பாது​காப்பு நடை​முறை​களோடு நீட் மறு​தேர்வு நடத்​தப்​படும். இதுதொடர்​பாக விரை​வில் விரி​வான வழி​காட்டு நெறிகள் வெளி​யிடப்​படும். இதன்​மூலம் எதிர்​காலத்​தில் தவறுகள் நடை​பெறு​வது தடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

நீட் மறு​தேர்வு குறித்து என்​டிஏ வட்​டாரங்​கள் கூறும்​போது, “வி​னாத்​தாள் கசிவு காரண​மாகவே நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. பாடத்​திட்​டம், வி​னாத்​தாள், தேர்வு நேரத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. மே மாத இறுதி அல்​லது ஜூன்​ மாதத்​தில்​ மறு​தேர்​வு நடத்​தப்​படக்​ கூடும்​" என்​று தெரிவித்​தன.

ரூ.100 கோடி வரை…


நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ நேற்று வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

நீட் தேர்​வுக்​கான வினாத்​தாளை அச்​சடித்த அச்​சகம் அல்​லது வாக​னங்​களில் வினாத்​தாள் கொண்டு செல்​லப்​பட்ட போது வினாத்​தாள் கசிந்​திருக்​கக் கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். முதல் வினாத்​தாளை வழங்​கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

வினாத்​தாள் சில இடங்​களில் ரூ.28 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்பட்டு உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்​யப்​பட்டு இருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை கைதானவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள். கேரளா​வில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர் பிடிபட்டு உள்​ளார். 

இதே வழக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக்​கில் சுபம் காரி​னார் என்​பவர் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர் போபாலில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரு​கிறார். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் சார்​பில் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

டெல்லி மட்​டுமன்றி பாட்​னா, கோட்​டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்​வேறு நகரங்​களி​லும்​ நேற்​று போ​ராட்​டங்​கள்​ நடத்தப்பட்டன.

செவ்வாய், 12 மே, 2026

சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 07:00 AM

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. 

17-வது சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.

இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். 

துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எழிலன் நாகநாதனை எதிர்த்து போட்டியிட்டு 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:55 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். 

சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். 

வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். 

அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:00 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் நேற்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
                         
இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 11 மே, 2026

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க - வெளிநாட்டு பயணங்களை ஒத்திவையுங்கள் -Work From Home - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை,  மே 11, 2026, சித்திரை, 28, பாரபவ வருடம் 04:50 AM

புதுடெல்லி,

ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் என மோடி கூறியுள்ளார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

ஹைதராபாத் - பணஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் திட்டம், சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது:

சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக பயணம் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும் மற்றும் பொருளாதார அழுத்தமும் மக்களுக்கு குறையும்.

"கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். அதற்கு மக்கள் பழகியும் விட்டனர். இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், அதுபோன்ற நடைமுறையை மீண்டும் தொடங்குவதுதான். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 

இது தேசிய நலனுக்கானதாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH), ஆன்லைன் கருத்தரங்குகள் மற்றும் விர்சுவல் கூட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயணங்களை குறைக்கும் விதமாக ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு முறைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த முறைகள், தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழலிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன டிஜிட்டல் தளங்கள் மூலம் உற்பத்தித்திறனை குறைக்காமல் பேணிக்காக்க முடியும். அதே நேரத்தில் எரிபொருள் தேவையையும் குறைக்க முடியும். 

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள் 

இறக்குமதியை குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்க வேண்டும் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியை சேமிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் பயன்பாட்டை குறைப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தால், அது தேச நலனுக்காக ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான பற்றாக்குறை இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை. வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் 

பெட்ரோல், டீசல் விலையும் வரும் 15 ஆம் தேதிக்குள் ரூ.4 முதல் 5 வரை உயரக்கூடும் என்று சில தகவல் வெளியானது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். 

பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். 

வீட்டில் இருந்தே வேலை.. 

கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், கச்சா எண்ணெய் விலை 126 டாலராக உள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயில் நிறுவனங்களுக்கு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. 

54 ஆயிரம் டன்னாக அதிகரிப்பு 

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்கதேசத்தில் எண்ணெய் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா எல்பிஜி உற்பத்தியை 36 ஆயிரம் டன்னில் இருந்து 54 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கருத்தில்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். 

இவ்வாறு செய்வதன் வாயிலாக, அன்னிய செலாவணியை சேமிப்பது மட்டுமின்றி, போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளில், சூரிய ஆற்றல் துறையில் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பெட்ரோல் எத்தனால் கலப்பு திட்டத்தில் பல்வேறு முன்னோடி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு, முதற்கட்டமாக 100 சதவீத வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியது. தற்போது, குழாய் வழி எரிவாயுவை சிக்கனமான முறையில் வினியோகிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

மேலும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அமைப்புகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த தொடர் முயற்சி காரணமாக, உலக அளவில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது.

சீர்திருத்தங்களின் விரைவுப் பாதையில் பயணித்து வரும் இந்தியா, அதே வேளையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம். 

ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா வேண்டாம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், காசிபேட் - விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையத்தையும், காசிபேட் ரயில் மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 

வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் சிவ பிரதாப் சுக்லா, காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...