திங்கள், 13 ஜூலை, 2026

2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்_ அண்ணாமலை பேச்சு


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.20 AM

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-

ஒரு அரசியல் இயக்கம்38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். 

இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். 

இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. 

அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. 

இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.

பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம்6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல.  எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும்.  5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. 

5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.  

கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடிதமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.  

இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்.வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும்  “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. .நான் முதலில் இந்தியன்நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம்.  நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். 

தவெகவில் அனைவரும் புதியவர்கள்கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. 

மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது.  அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.  

போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.100 AM

சென்னை,

“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.

2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.

ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.

அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.

ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.

சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.00 AM

தெஹ்ரான்,

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்​பட்​டது. ஆனால், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை சமீபத்தில் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் தாக்​குதல் நடத்​தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்தியது.

இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.

நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
 

ஞாயிறு, 12 ஜூலை, 2026

“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூலை  12, 2026,  ஆனி  28, பாரபவ வருடம்  00.15 AM

சென்னை,

‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.

5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.

8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.

உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.

டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?

எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 11 ஜூலை, 2026

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்


 பதிவு: சனிக்கிழமை,  ஜூலை  11, 2026,  ஆனி  27, பாரபவ வருடம்  01.30 AM

சென்னை,

தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் எஸ்​.ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

‘தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​போது இடைத் தேர்​தல் நடத்​தப்​பட்​டால், வழக்​கின் நோக்​கம் அர்த்​தமற்​ற​தாகி​விடும். வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​துக் கொண்டு இடைத் தேர்​தலை நடத்​தி​னால், தேவையற்ற சட்ட சிக்​கலை ஏற்​படுத்​தி​விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடை​பெற்ற வாதம்

மனு​தா​ரர் தரப்​பு வழக்​கறிஞர் வி.ஆர்​.சண்​முக​நாதன்

நிலுவை வழக்கு விசா​ரணைக்​குப் பிறகு, தேர்​தலில் தோல்​வி அடைந்​தவரை வெற்றி பெற்​றவ​ராக உயர் நீதி​மன்​றம் ஒரு​வேளை அறிவிக்​கக்​கூடும். அதே நேரம், இடைத் தேர்​தலில் ஒரு எம்​எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால், ஒரே தொகு​திக்கு 2 எம்​எல்​ஏக்கள் என்ற நிலை உரு​வாகும். எனவே, தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​வரை அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்​தக்கூடாது என உச்ச நீதி​மன்​றம் பல​ வழக்​கு​களில் தீர்ப்​பளித்​துள்ளது.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல். சுந்​தரேசன் மற்​றும் நிரஞ்​சன் ராஜகோ​பாலன்: பல தேர்​தல் வழக்​கு​கள் குறை​பாடு​களு​டன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதுகுறித்த ஆவணங்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு வரவில்​லை. அதனால், அவற்​றின்​மீது தேர்​தல் ஆணை​யம் எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்க முடி​யாது. மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி, காலி​யாக உள்ள தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்துவது அவசி​ய​மான ஒன்​று.

தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண்

தேர்​தல் வழக்​கு​கள் தொடரப்​படு​வதற்கு முன்பே முதல்​வர் விஜய் உள்​ளிட்​டோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டனர். அவர்​கள் ராஜி​னாமா செய்​யும்​போது எந்த தேர்​தல் வழக்​கும் நிலு​வை​யில் இல்​லை. முதல்​வர் விஜய் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜி.​மாசிலாமணி: மனு​தா​ரர் இத்தொகு​தி​களின் வாக்​காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்​திர​மும் இல்​லை. மேலும், காலி தொகு​தி​களில் இடைத் தேர்​தல் நடத்​து​வ​தா, வேண்​டாமா என முடிவு எடுக்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வு

தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தலை நடத்​துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செல​விடப்​படு​வதுடன், ஒரே தொகு​திக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உரு​வாகி அரசி​யல் சாசன பிரச்​சினை எழும். அதே​நேரம், தேர்​தல் வழக்​கு​கள் தொடருவதற்கு முன்​பாகவே அத்தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்கப்​பட்​டன என்ற வாதத்தை​யும் ஆராய வேண்​டி​யுள்ளது.

எனவே, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசு, சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் முதல்​வர் விஜய், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோர் 3 வாரங்​களில் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை இந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் தொடர்​பான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடக் கூடாது. இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

வியாழன், 2 ஜூலை, 2026

தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை - செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?

பதிவு: வியாழக்கிழமை,  ஜூலை  02, 2026,  ஆனி  18, பாரபவ வருடம்  04.10 AM

சென்னை,

தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்​பட, ஆளும் தவெக எம்​எல்​ஏ.​விடம் ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக 3 பேரைப் போலீ​ஸார் கைது செய்து தீவிர​மாக விசா​ரித்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், 234 தொகு​தி​களில் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​டு​கள், விடு​தலைச் சிறுத்​தைகள், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரி​வித்​தன. இதையடுத்​து, விஜய் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றுக் கொண்​டார்.

சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்பின் போது அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஒரு பிரி​வினர் தவெக​வுக்கு ஆதரவு அளித்தனர். அப்​போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க கு​திரை பேரம் நடை​பெற்​ற​தாக குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. தற்​போது ஒவ்​வொரு கட்​சி​யினரும் வெவ்​வேறு கட்​சிக்​குத் தாவி வரு​கின்​றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்​களில் கவிழும் என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்​மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ என்​.இளை​ய​ராஜா​விடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்​போது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: 

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக எம்​எல்ஏ டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை, சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் செல்​போனில் தொடர்பு கொண்​டுள்​ளார். அப்​போது, தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும், முக்​கிய அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், வேறு பணி​யில் இருப்​ப​தாக கூறி எம்​எல்ஏ இளை​ய​ராஜா அந்த அழைப்பை துண்​டித்​துள்​ளார். அதன் பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​தாக கூறப்​படும் திரு​நாவுக்​கரசு, தமிழக சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும், அந்த தீர்​மானத்​தின் மீதான வாக்​கெடுப்​பின் போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாக தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்க தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும், அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்த போது, ‘‘இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும்’’ என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார்.

அதில், ‘‘மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​ விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன், லஞ்​சம் வழங்க முன்​வந்​தும், உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். செல்​போன் அழைப்பு விவரங்​கள், தொழில்​நுட்ப ஆதா​ரங்​கள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில், சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், திமுக முன்​னாள் அமைச்​சரும், கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏவு​மான செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக் குமார், இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நரேஷை சென்​னை​யில் சந்​தித்​தது தெரிய வந்​துள்​ளது என்று போலீஸ் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. 

மேலும், செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக் குமார் ஆகியோரின் அறி​வுரை​யின்​படியே, எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை திரு​நாவுக்​கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் மேலும் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது, கருத்​துக் கணிப்பு நிறு​வனம் என்ற பெயரில் அரசி​யல் தொடர்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்​ட​தா, பின்​னணி​யில் வேறு முக்​கிய நபர்​கள் உள்​ளனரா அல்​லது ஆட்​சி​யைக் கவிக்​கும் நோக்​கின் முதல் கட்ட முயற்​சியா என்பது உட்பட பல்​வேறு கோணங்​களில் போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்து வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில்​ எடுத்​து வி​சா​ரிக்​கும்​ போது மேலும்​ பல திடுக்​கிடும்​ தகவல்​கள்​ வெளி​யாக வாய்​ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது.

கரூரில் 2 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 ஜூலை, 2026

அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி - 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை - தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்

பதிவு: புதன்கிழமை,  ஜூலை  01, 2026,  ஆனி  17, பாரபவ வருடம்  06.00 AM

சென்னை,

தமிழகத்தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி உள்​ளிட்​ட​வற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாக ரூ.200 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக பரபரப்பு குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. 

இதுதொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

சென்னை தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், பி.டி.அரசகு​மார் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அந்த புகாரில், 

‘‘தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கூடு​தல் வகுப்​பறை​கள் அமைக்க அனு​ம​தி, கட்​டிட திட்ட ஒப்​புதல் உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனு​ம​தி​களை விரை​வாக பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்​துள்​ளார்’’ என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யின் அடிப்​படை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் திமுக செய்​தித் தொடர்​புக் குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த பி.டி.அரசகு​மார் கடந்த 27-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

பின்​னர் அவர் நீதி​மன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்​டு, நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த மோசடி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக விசா​ரணை​யில் தெரிய வந்துள்​ளது. தலைமறை​வாக உள்ள முன்​னாள் எம்​எல்​ஏ​வைத் தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், 

‘‘தனி​யார் பள்​ளி​களுக்கு அரசு அங்​கீ​காரம் மற்​றும் பல்​வேறு அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது’’ என்று உறு​திப்​படுத்தி உள்​ளார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​களைக் கண்​டறிவது, பணப் பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்​வது மற்​றும் கூடு​தல் சாட்​சி​யங்​களைச் சேகரிப்​பது போன்ற பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார். 

இந்த மோசடி​யால் பாதிக்​கப்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் அல்​லது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு அலு​வல​கத்தை நேரில் அணுகி அல்​லது தொலைபேசி மூலம் புகார் அளிக்​கலாம். புகார்​தா​ரர்​களின் அடை​யாளம் மற்​றும் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உறுதி அளித்​துள்​ளார்.

இதையடுத்​து, பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த பள்ளி நிர்​வாகி​கள் தொடர்ந்து புகார் அளித்து வரு​கின்​றனர். போலீ​ஸார் நடத்​திய விரி​வான விசா​ரணை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​களிடம் ரூ.25 லட்​சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. 

இதனால், இந்த மோசடி​யில் சிக்​கி​யிருக்​கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்​தேகம் விசா​ரணை அதி​காரி​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

இது​வரை 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களின் நிர்​வாகி​களிடம் போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களைப் பதிவு செய்​துள்​ளனர். மேலும், மாவட்ட வாரி​யாகப் பாதிக்​கப்​பட்ட பள்​ளி​களின் முழு​மை​யான பட்​டியலை சமர்ப்​பிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களுக்​கும் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இந்த மோசடி தொடர்​பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்​வரக் கூடும் என்​ப​தால், வழக்​கின் பரி​மாணம் இன்​னும் விரிவடை​யும். எனவே, பணப் பரிவர்த்​தனை​கள், வங்​கிக்கணக்கு விவரங்​கள் மற்​றும் தொடர்​புடைய ஆவணங்​களை ஆய்​வு செய்​து போலீ​ஸார்​ வி​சா​ரணை​யைத்​ தீவிரப்​படுத்​தி உள்​ளனர்​.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...