ஞாயிறு, 28 ஜூன், 2026

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.00 AM

சென்னை,

தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து காங்​கிரஸ் தேசிய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது அவரது செயல்​பாடு​களால் மூத்த தலை​வர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாக அவர், எந்த நேரத்​தி​லும் மாற்​றப்​படலாம் என்ற பேச்சு எழுந்​தது. பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலை​யில், தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து அகில இந்​திய காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுகுறித்து சத்​தி​யமூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 35 தொகு​தியி​லா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். ஆனால், ப.சிதம்​பரத்தை கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்டு வந்து, தேசி​யத் தலை​மையை 28 இடங்​களுக்கு ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதுத​விர, வேட்​பாளர்​கள் தேர்​வில் குளறு​படி நடந்​த​தாக தமிழக மகளிர் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ஹசீனா சையத் கிளப்​பிய குற்​றச்​சாட்டு சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதன் அடிப்​படை​யிலேயே, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்​தது.

மாநிலத் தலை​வர் பதவியைக் கைப்​பற்ற கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, செல்​லக்​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோ​ரும் தீவிர​மாக முயற்சி மேற்​கொண்டு வந்​தனர். இந்த நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யின் முழு ஆதர​வுடன் மாநிலத் தலை​வர் பதவியை மாணிக்​கம் தாகூர் கைப்​பற்​றி​யுள்​ளார். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகின்​றன.

சிவகங்​கை​யில் பிறந்த மாணிக்​கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அமைப்​பில் (என்​எஸ்​யூஐ) இணைந்​தார். கடந்த 2009, 2019, 2024 மக்​களவை பொதுத் தேர்​தல்​களில் விருதுநகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எம்​.பி.​யா​னார். 2014 பொதுத் தேர்​தலில் இத்​தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார். கட்​சி​யின் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும், பிற மாநிலங்​களின் தேர்​தல் பொறுப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரக் களத்​தில் இருந்தே திமுகவை இவர் கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். 

முன்​னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விரை​வில் காங்​கிரஸில் இருந்து விலகி திமுக​வில் இணைய உள்​ள​தாக​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  04.50 AM

சென்னை,

‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர். அரசு மரியாதையுடன் இறு​திச் சடங்​கு​கள் இன்று நடை​பெறுகின்​றன.

இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் 2 நாட்​களுக்கு முன்பு கோவா​வில் நடந்த நடிகை குஷ்பு மகள் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டார். பின்​னர் சென்னை திரும்​பிய

அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எம்​.பி.க்​கள் டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன். சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பெண்​கள் உட்பட ஏராள​மான பொது​மக்​கள், ரசிகர்​கள் நீண்ட வரிசை​யில் வந்து அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். பாக்​ய​ராஜின் திரைப்​படக் காட்​சிகள், பிரபல வசனங்​களை பலரும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​து, அவரது நினை​வு​களை சோகத்​துடன் பகிர்ந்து வரு​கின்​றனர். பாக்​ய​ராஜ் மறைவையொட்டி முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்த் திரை​யுல​கின் தலைசிறந்த இயக்​குநர், நடிகர், திரைக்​கதை ஆசிரியர், வசனகர்த்​தா, இசை அமைப்​பாளர் என பன்​முகத் திறமை​யால் முத்​திரை பதித்த கே.​பாக்​ய​ராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், ஆழ்ந்த வேதனை​யும் அடைந்​தேன்.

தனித்​து​வ​மான கதை​யாக்​கம், நகைச்​சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்​வியல் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆழமான உணர்​வு​களைப் பிர​திபலிக்​கும் திரைப்​படங்​கள் மூலம் தமிழ் மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்த கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்​பரிய​தாகும். அவரது ஒவ்​வொரு படைப்​பும் பொழுது​போக்​கோடு, மனித நேயம் மற்​றும் சமூக விழு​மி​யங்​களைப் பேசும்; காலத்​தால் அழி​யாத நினை​வு​களாக என்​றும் நிலைத்​திருக்​கும். அவரது மறைவு தமிழ்த் திரை​உல​குக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள், திரைத்​துறை​யினர், ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் இளைப்​பாறப் பிரார்த்​திக்​கிறேன்.

இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்​துறை​யில் கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றி, அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அவரது இறு​திப் பயணத்​துக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் அறி​வித்​துள்​ளார். யதார்த்​த​மான நடிகர், இயக்​குநர் என்று அறியப்​பட்​ட​வர் கே.​பாக்​ய​ராஜ். அது மட்​டுமின்​றி, தனது தனிச் சிறப்​பான பாணி​யால் எதிர்​பா​ராத, அதே​நேரம் ரசிக்​கக்​கூடிய திருப்​பங்​களைக் கொண்ட திரைக்​கதை அமைப்​ப​தில் வல்​ல​வ​ராகத் திகழ்ந்​தவர்.

அவர் இயக்​கிய படங்​கள் தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி என பல மொழிகளி​லும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்​றன. அதனால், இந்​திய அளவில் ‘திரைக்​கதை மன்​னன்’ என்று கொண்​டாடப்​பட்​டார். முக்​கிய பிர​முகர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள், பொது​மக்​களின் இறுதி அஞ்​சலிக்கு பிறகு, பாக்​ய​ராஜ் உடல் இன்று நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, பெசன்ட்​நகர் மின் மயானத்​தில் இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற உள்​ளன.

இயக்​குநர் பார​தி​ராஜா கடந்த 10-ம் தேதி கால​மா​னார். தனது குரு​வான பார​தி​ராஜா மறைந்த 17-வது நாளி​ல் பாக்​ய​ராஜ் மறைந்​தது ரசிகர்​கள்​, திரை​யுல​கினர்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

சனி, 27 ஜூன், 2026

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  27, 2026,  ஆனி  13, பாரபவ வருடம்  01.50 AM

சென்னை,

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்​தையொட்டி சென்​னை​யில் நடை​பெற்ற மாரத்​தான் ஓட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​து, அதில் பங்​கேற்​றார். அவருடன் அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட அதி​காரி​களும் மாரத்​தானில் கலந்​து​கொண்​டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்​பு, சட்​ட​விரோத கடத்​தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் சென்​னை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ்’ என்ற கருத்​துடன் நேற்று மாரத்​தான் ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்த முதல்​வர் விஜய், விழிப்​புணர்​வுப் பலகை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்​திட்​டார். அவரது தலை​மை​யில் அனை​வரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர். இதன்​பிறகு, மெரினா காம​ராஜர் சாலை​யில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் இருந்து தீவுத்​திடல் வரை மாரத்​தான் ஓட்​டம் தொடங்​கியது.

முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். 
6 கி.மீ. தூரம் நடை​பெற்ற ஓட்​டத்​தில், ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் கலந்​து​கொண்ட விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​கள், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் விளை​யாட்டு வீரர்​கள், கல்​லூரி மாணவ, மாணவி​கள், அரசு அலு​வலர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பொது​மக்​கள் என 15 ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.

இவர்​களு​டன் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், மரிய​வில்சன், ரா.குமார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப்நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோரும் மாரத்​தானில் பங்​கேற்று ஓடினர். பின்​னர், வீரர்​களு​டன் கலந்​துரை​யாடிய முதல்​வர் விஜய், அவர்​களு​டன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யின் முடி​வில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “தமிழக வரலாற்​றில் வேறு எந்த முதல்​வரும் மாரத்​தான் ஓடியது இல்​லை. முதல்​வர் விஜய்​தான் முதல்​முறை​யாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்​தான் ஓடி​யுள்​ளார். அவரைப் போலவே தமிழக​மும் ஆரோக்​கிய​மாக மாறும்” என்​றார்.

முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காக்​க​வும், குற்​றங்​களைத் தடுக்​க​வும் போதைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது அவசி​யம். கல்​வி, விளை​யாட்​டு, திறன் மேம்​பாடு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களில் இளைஞர்​களை ஈடு​படுத்​து​வதன் மூல​மாக​வும், கடும் சட்ட நடவடிக்​கை கள் மூல​மாக​வும் போதைப் பொருட்​களை ஒழித்​து, வலிமை​யான சமு​தா​யத்​தைப் படைக்க முடி​யும்.

போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுக்க தமிழக அரசு எடுத்​து​வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களுக்கு அனை​வரும் துணைநின்​று, போதைப் பொருள் இல்​லாத, பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான தமிழகத்​தை உரு​வாக்​க உறு​தி​யேற்​போம்​. 

இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

வெள்ளி, 26 ஜூன், 2026

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஜூன்  26, 2026,  ஆனி  12, பாரபவ வருடம்  03.00 AM

திருவாரூர்,

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.


திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில்  நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார்.  அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.

கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.

மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு  போவார்களே  தவிர, வெளியேற்ற மாட்டார்.

அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வியாழன், 25 ஜூன், 2026

அன்புமணியை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... பாமகவில் முடிவுக்கு வரும் குடும்ப யுத்தம்! - மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி

பதிவு: வியாழக்கிழமை,  ஜூன்  25, 2026,  ஆனி  11, பாரபவ வருடம்  12.30 AM

தைலாபுரம்,

தனது திருமண நாளில் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன்மூலம், பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. ‘இனி நல்லது நடக்கும்’ என அன்புமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பாமக தலைவர் அன்புமணி. 

இதற்கு பாலமாக இருந்தவர் அவருடைய மனைவியான தருமபுரி எம்எல்ஏ சவுமியா. இதனால், தந்தை - மகன் இடையே விரிசல் ஏற்பட்டது.

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை நியமித்துள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேஜை மீது மைக்கை தூக்கி வீசி எதிர்வினையாற்றினார் அன்புமணி. இதனால் கோபடைந்த ராமதாஸ், என்னுடைய முடிவை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் செல்லலாம் என்றார். பனையூரில் கட்சி அலுவலகம் செயல்படும், என்னை அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் சந்திக்கலாம் என ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி கொடுத்தார்.

மாமல்லபுரத்தில் 2025 சித்திரை மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணியை புகழாமல், மாநாட்டுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்ததாக கூறி, திருக்கச்சூர் ஆறுமுகத்தை ராமதாஸ் பாராட்டினார். இதனால் தந்தை - மகன் இடையே விரிசல் அதிகரித்தது.

தைலாபுரத்தில் கடந்த 2025 மே 16-ம் தேதி ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்தனர். அவர்களை வர விடாமல் அன்புமணி தடுத்துவிட்டார் என்றார் ராமதாஸ். மேலும் அவர், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்தார்.

தலைமை பண்பு இல்லாதவர், கோபக்காரர், தாய் மீது பாட்டிலை தூக்கி வீசினார், நிர்வாக திறன் இல்லதாவர், மத்திய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு, பாஜகவுடன் கூட்டணிக்காக கணவனும், மனைவியும் எனது இரு கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர், பாமக தலைவர் என்ற பதவிக்கு மூடி சூட நாள் குறித்து மருமகள் சவுமியா நெருக்கடி கொடுத்தார் என மிக கடுமையாக மகன் மற்றும் மருமகளை ராமதாஸ் விமர்ச்சித்தார்.

மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன், என்னுடைய பெயரை அன்புமணி இணைந்து போடக் கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தது பாமக தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க, தன்னிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை பொருட்படுத்தாமல், அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தார் பழனிசாமி.

பாமக எனும் கட்சி, கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. இது ராமதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்ற கதவுகளை தட்டியும் சாதகமான அரசியல் சூழல் ராமதாஸுக்கு ஏற்படவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சுமார் 40 தொகுதிகளில் களம் கண்ட ராமதாஸ், அனைத்திலும் டெபாசிட் இழந்தார். பல தொகுதிகளில் 4 இலக்க எண்களில் வாக்கு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் கிளசரின் போட்டுக் கொண்டு பேத்திகள் அழுவதாகவும், தருமபுரி அதர்மபுரியாக மாறிவிடும் என ராமதாஸின் மிக கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உட்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.

தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளை கூறி, சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையில் தந்தை - மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது.

அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளை ஒட்டி, அவர்களிடம் ஆசி பெற தைலாபுரத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேர பிள்ளைகள் சகிதம் அன்புமணி இன்று (ஜூன் 24)  வருகை தந்தார். ஆரத்தி எடுத்து ராமதாஸ் தரப்பினர் வரவேற்றனர்.

ஒன்றரை ஆண்டுகளாக மகனை சந்திப்பதை தவிர்த்து வந்த ராமதாஸ், தற்சமயம் மகனை கண்டதும் கட்டி தழுவினார். இருவரும் கண்ணீர் சிந்தி உள்ளனர். தாயையும் அன்புமணி அரவணைத்தார். 


மேலும் பேர பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேர பிள்ளைகளையும் ராமதாஸ் - சரஸ்வதி கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போது அவர்களது கால்களில் விழுந்து அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் ஆசி பெற்றனர். ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி, நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது பாமகவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி

பாமக நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை குடும்பத்துடன் வந்து அன்புமணி சந்தித்தபோது, அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்துள்ளார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.

தலைவர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், மகனை செயல் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றார். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் மகனுக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறித்து, மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் வழங்கினார்.

தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால், கட்சியிலும் புகைச்சல் தொடரும் என்பதுதான் நிதர்சனம்.

புதன், 24 ஜூன், 2026

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் - மத்திய அரசுடன் மோதலை விரும்​ப​வில்​லை - முதல்வர் விஜய் திட்டவட்டம்

பதிவு: புதன்கிழமை,  ஜூன்  24, 2026,  ஆனி  10, பாரபவ வருடம்  6.00 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.

‘‘நமக்கு எப்​போதும் தமிழகத்​தின் வளர்ச்​சி​தான் முக்​கி​யம். எனவே, மத்​திய அரசுடன் கண்​மூடித்​தன​மான மோதலை விரும்​ப​வில்​லை’’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்​று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது எதிர்க்​கட்​சிகளுக்குப் பதிலளித்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: 

நமது தமிழகம் மின்​மிகை மாநில​மாக இருந்​தா​லும், கடந்த காலங்​களில் ஏற்​பட்ட நிர்​வாக குளறு​படிகள், சிலரின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மின்​வெட்​டுக்​குக் காரண​மாக இருக்​கின்​றன.

விரை​வில் இந்த மின்​வெட்டு நிலைமை அறவே நீக்​கப்​படும். சட்​டம் - ஒழுங்கு சரி​யாக இருக்க வேண்​டும் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே போல், பெண்​கள் பாதிக்​கப்​படு​வதை​யும் இங்கு யாராலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. 

அதற்​கான கடுமை​யான நடவடிக்​கையை அரசு எடுத்து வரு​கிறது. அதே​போல், போதைப்​பொருள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நம் அரசு கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்​போம்.

இவை எல்​லாம் பல ஆண்​டு​களாக இருக்​கும் பிரச்​சினை​கள். கடந்த 10 மாதங்​களாக நமது மாநிலத்​தில் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி இல்​லை. கடந்த ஆட்​சி​யில் நடந்​ததற்கு எல்​லாம் நமது ஆட்​சி​யில்​தான் விடையே கண்​டு​பிடித்து இருக்​கிறோம். 

போதைப் பொருள் நடமாட்​டம் தாறு​மாறாக பரவி​யுள்​ளது. இவற்றை எல்​லாம் ஆரம்​பக் கட்​டத்​திலேயே யார் கட்​டுப்​படுத்தி இருக்க வேண்​டும். அப்​போது காவல் துறை யார் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. காவல் துறையைக் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக் கொண்டு ஆரம்​பக் கட்​டத்​திலேயே போதைப் பொருள் நடமாட்​டத்தை ஏன் கட்​டுப்​படுத்​த​வில்​லை? நம்​முடன் சேர்த்து மக்​கள் மீதும் அவதூறு பரப்​பு​கிறார்​கள்.

மக்​கள் நமக்கு ஓட்​டுப் போட்​டதும், குடும்​பம் குடும்​ப​மாக மக்​கள் ஆதரவு தெரி​வித்​ததும் தவறு என்​கிறார்​கள். இது இப்​போது இல்​லை. எம்​ஜிஆர் காலத்​தில் இருந்தே இருக்​கிறது. எம்​ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்​போதும் மக்​களைத் தவறாகப் பேசி​யிருக்​கிறார்​கள். 

கடந்த 50 ஆண்​டு​களாக ஒரே ‘டெக்​னிக்'. தொழில்​நுட்​பம் எல்​லாம் மாறி வேறு எங்​கேயோ சென்று கொண்​டிருக்​கிறது. கொஞ்​சம் டெக்​னிக்​கை​யா​வது மாற்ற வேண்​டும். மக்​களுக்கு பயனுள்ள ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள் இருந்​தால் சொல்​லலாம்.

5 நிமிடம் பேசி​யதற்கே கொளத்​தூர் இந்த ஆட்​டம் ஆடியது. பேசு பேசு என்​றால் அப்​புறம் நான் என்ன செய்​வது? ஆளுநர் உரையன்​று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்​படி ஒரு நிகழ்வு நடந்​ததே இல்​லை. மரபையே மாற்றி விட்​டீர்​கள் என்று எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் கூறினர். 

கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்​னாள் முதல்​வர் கருணாநிதி படத்​தைத் திறந்து வைக்​கும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, தேசிய கீதத்​தைத் தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து என்று சொன்​னார்​கள்.

அது ஞாபகம் இருக்​கிற​தா? தேசிய கீதத்தைத் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்​பும், அதே நிகழ்ச்​சி​யில் 2 முறை​யும் பாடப்​பட்​டது நினை​வில் இருக்​கிற​தா? இதை கேட்​டால் அது குடியரசுத் தலை​வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்​வார்​கள். 

நமது அமைச்​சர்​களுக்​கும், எம்​எல்​ஏக்​களுக்​கும் ஒன்​றும் தெரி​யாது என்று சொல்​கிறார்​கள். எங்​களுக்கு ஒன்​றும் தெரி​யாது​தான். எங்​கள் எம்​எல்​ஏக்​களுக்கு மக்​கள் பணி செய்ய தெரிந்த அளவுக்​கு, மக்​கள் பணத்தை சுருட்ட தெரி​யாது​தான்.

உங்​களைப் போல் முறை​கேடு​கள் செய்​வதை நாங்​கள் தெரிந்து கொள்ள போவ​தில்​லை. நமது அரசு விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்​குப் பக்க பலமாக​வும், உறு​துணை​யாக​வும் நிற்​கும். நாம் மத்​தி​யில் கூட்​டாட்​சி, மாநிலத்​தில் சுயாட்சி என்ற கொள்​கை​யைக் கொண்​ட​வர்​கள்​தான். 

தற்​போதைய மத்​திய அரசு சார்ந்த கட்​சி​யின் அரசி​யலில் கொள்கை அளவில் நேர் எதி​ராக நிற்​கிறோம். அதே நேரத்​தில் கண்ணை மூடிக்​கொண்டு மத்​திய அரசுடன் மோதல் போக்கை விரும்​புபவர்​கள் அல்ல. நமக்கு எப்​போதும் தமிழக வளர்ச்சி மட்​டும்​தான் முக்​கி​யம்.

அதற்​காக நம்​முடைய அரசி​யல் ரீதி​யான கொள்​கைகளை​யோ, மாநில உரிமை​களையோ கொஞ்​ச​மும் விட்டு தரமாட்​டோம். எனவே, நம் மக்​களுக்​கோ, சிறு​பான்மை சகோ​தர்​களுக்​கோ, ஆதரவு இயக்​கங்​களுக்கோ எவ்​வித சந்​தேக​மும் வேண்​டாம். 

நாம் யாருடைய அணி​யும் இல்​லை. மாநில உரிமை​யில் எப்​போதும் உறு​தி​யாக இருப்​போம். அரசி​யல் வேறு, மத்​திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்​கும்​ நிர்​வாக அணுகு​முறை வேறு. இதில்​ தெளி​வாக இருக்​கிறோம்​. 

இவ்​வாறு முதல்​வர்​ விஜய்​ பேசி​னார்​.

செவ்வாய், 23 ஜூன், 2026

தமிழக சட்டசபை முட்டுக்காடுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன்  23, 2026,  ஆனி  09, பாரபவ வருடம்  5.50 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது. 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார். 

தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.

கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...