பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 10:50 AM
திண்டுக்கல்,
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார்.
அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்றும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் மற்றும் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதில் ஒரு சிறுமி, தி.மு.க. வெல்லட்டும் என்ற பாடலை பாடி காட்டினார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பின்னர் திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் சவாரி மேற்கொண்டார்.
பின்பு ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்தினார்.
அங்கு இருந்த தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.
தனியார் ஓட்டலில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வணக்கம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிறார்.
இதனிடையே நேற்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 29 ஏப்ரல், 2026
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் - மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 07:15 AM
மதுரை,
மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது.
தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்து வருகின்றனர்.
பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர்.
அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார்.
வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.
இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு - கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல் - 1.88 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 01:45 AM
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 இடங்களில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தர்லவாடா பகுதியில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஒரு கிகாவாட்டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்பட்டினத்தில் 2028-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், தர்லவாடாவில் 266.6 ஏக்கரிலும், பின்னர் அடவிவரம் பகுதியில் 160 ஏக்கரிலும், அனகாபல்லி மாவட்டம் ராம்பில்லி அருகே 174.80 ஏக்கரிலும் இந்த டேட்டா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையம் கட்டப்படும்போதே சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
கேம் சேஞ்சர்
விசாகப்பட்டினத்துக்குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்பது ஒரு கேம் சேஞ்சர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: விசாகப்பட்டினத்துக்கு மட்டுமல்ல, ஆந்திராவுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்சர்தான்.
ஆந்திர வரலாற்றில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகும். இதனால் நான் மத்திய அரசுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆந்திராவின் பங்கு மிக முக்கியமாக மாற உள்ளது. சர்வதேச டேட்டா நுழைவு வாயிலாக ஆந்திரா இருக்கும். மேலும் பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வர உள்ளன. இந்த மையம் 2028 நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும். வரும் ஜூலை மாதத்தில் போகாபுரம் விமான நிலையத் திறப்பு விழா நடைபெற உள்ளது. நாங்கள் நிறுவனங்களுடன் வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமே செய்வதில்லை. அதை முனைப்புடன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் குறியாக உள்ளோம். இதனால்தான் பல நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முன்வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஏஐ பட்டினம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது....
நாடே பெருமிதம் அடையும் விதத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஒரு சைபராபாத் நகரை உருவாக்கி அதை தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக மாற்றி சாதனை படைத்தவர் சந்திரபாபு நாயுடு.
தற்போது விசாகப்பட்டினம் வருங்காலத்தில் ஏஐ பட்டினமாக மாறும் விதமாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர்கள்.
இளைய சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர் அமைச்சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்சிகளால் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.
எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது. செமி கண்டக்டர் தயாரிப்பில் நம் நாடு முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு டாலர் மதிப்புள்ள ‘சிப்’ கிடைக்காவிடில், மில்லியன் டாலர் பொருட்களின் உற்பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்திராவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே பணிகள் ஆந்திராவில் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்திராவில் ‘தென் கடலோர ரயில்வே வட்டம்’ தொடங்கப்பட உள்ளது. விரைவில் புல்லட் ரயில்கள் தென் இந்திய மாநிலங்களில் பறக்க உள்ளன.
இதனால், சென்னை, அமராவதி, ஹைதராபாத், பெங்களூரு நகரங்கள் பயனடைய உள்ளன. அமராவதியில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 70 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மாநில அமைச்சர் லோகேஷ், கூகுள் நிறுவன பிரதிநிதிகள் உட்பட மேலும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
செவ்வாய், 28 ஏப்ரல், 2026
சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 09:15 AM
மதுரை,
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது.
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன். போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அப்போது வில், அம்புடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சி தந்தனர்.
இதில், மீனாட்சி அம்மனாக சிவாதித்யன், சுந்தரேசுவரராக சட்டநாத ராஜசேகரன் ஆகியோர் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் கூட்டம் அலைமோதியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக சென்று ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர்.
10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.
திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் மணக் கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இன்று பகல் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்த ரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் காண்பதற்காக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு வெப்பத்தை தணிக்க 300 டன் வரை குளு குளு ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண் ணீர் பாட்டில், பிரசாத பை வழங்கப்படுகிறது.
கோவிலின் பகுதிகளில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.
திருக்கல்யாண விழாவுக்காக போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்சித் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் மாசி விதிகளில் போலீசார் உதவி மையம் அமைத்தும், காண்காணிப்பு கோபுரம் மூலமும், டிரோன்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்துள்ள பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.
திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா மே 1- தேதியும் நடைபெறுகிறது.
இதன்மூலம் மதுரை மாநகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 07:00 AM
திருச்செந்தூர்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார்.
அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'வெற்றி வேல்' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபாடு செய்தார்.
விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - திருமலையில் பக்தர்கள் பாதிப்பு - விற்பனையாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 02:30 AM
திருமலை,
ஆந்திர மாநிலத்தில் திடீரென பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து திருமலைக்கு வந்த பக்தர்கள் தங்களின் கார், வேன்களுக்கு போதிய டீசல், பெட்ரோல் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, டீலர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் முழுவதும் திடீரென பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடப்பா, விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள ஆயில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. ‘இதெல்லாம் உண்மை இல்லை. பெட்ரோல், டீசல் பதுக்கப்படுகிறது.
இதன் மூலம் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கலாமென டீலர்கள் முடிவெடுத்து வேண்டுமென்றே மாநிலம் முழுவதும் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளனர்’ என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் சுமார் 4,150 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதில் தற்போது 70 சதவீதத்துக்கும் மேலான பங்க்குகளில் ‘நோ ஸ்டாக்’ அறிவிப்பு பலகைகள்தான் காணப்படுகின்றன. அண்டை மாநிலங்களான தெலங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. ஆனால் திடீரென ஆந்திராவில் மட்டும் இப்பிரச்சினை தலைதூக்க காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், டீலர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர் என்பதுடன் சுற்றுலா துறையும் பாதிப்படையும் என்பதால் 24 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இதுதொடர்பாக மாநிலம் தழுவிய அறிக்கையை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மாலை வரையிலும்கூட திருப்பதி, சித்தூர், நெல்லூர், குண்டூர், கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டங்கள் என ஆந்திரா முழுவதும் எரிபொருள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
பெட்ரோல், டீசல் வந்ததும் குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் முன்பு வாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கி விடுகின்றனர். இதனால் சில மணி நேரங்களிலேயே பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடுகிறது. திருமலையிலும் இதே நிலைமை உள்ளதால், வெளியூர்களில் இருந்து கார், வேன்களில் வரும் பக்தர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
திருமலையில் உள்ள 2 பெட்ரோல் பங்க்குகளிலும் நேற்று மதியம் முதல் பெட்ரோல், டீசல் இல்லை எனும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டதால் வெகு தூரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. திருமலையில் தொடர்ந்து தங்குவதற்கு அறைகளும் கிடைக்காமல், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கீழே இறங்கி செல்லவும் முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியதால், உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், பின்னர் படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகியவற்றின் கீழ், விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 ஏப்ரல், 2026
மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்
வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.
முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள்
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.
இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.
வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...