பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026, சித்திரை, 06, பாரபவ வருடம் 01:40 AM
புதுடெல்லி,
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை தோற்கடித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துதற்காக அரசியல் சாசனத் திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த 16-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026 மீது மக்களவையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, மற்ற 2 மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மன்னிப்பு கோருகிறேன்
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: நமது நாட்டின் மகள்கள், சகோதரிகளிடம் பேச வந்துள்ளேன். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
அதற்காக அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்டகட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக நமது பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மசோதா தோல்வி அடைந்தபோது நான் சோகத்தில் ஆழ்ந்தேன். ஆனால், அந்த கட்சிகளின் எம்.பி.க்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மேஜைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். அவர்களது நடவடிக்கைகள், பெண்களின் சுயமரியாதை மீதான நேரடிதாக்குதல். இதை இந்திய பெண்கள் மறக்க மாட்டார்கள். இது அவர்களிடம் நீங்காத வடுவைஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சியினர் தங்களது தொகுதிக்கு செல்லும்போது, அவர்களது நாடாளுமன்ற செயல்பாடுதான் பெண்களின் மனதில் நிழலாடும்.
மசோதாவை தோற்கடித்தவர்கள் பெண்களின் சக்தியை சாதாரணமாக எடை போட்டுவிட்டனர். இதன்மூலம் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவத்தை இழைத்துள்ளனர். அதற்கான தண்டனையை பெண்கள் வழங்குவார்கள். மக்களின் தண்டனையில் இருந்து எதிர்க்கட்சிகள் தப்பிக்க முடியாது. வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு விரும்பியது. வடக்கு,தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பிராந்தியங்களிலும் ஆட்சி, அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசின் உன்னதமான நோக்கத்தை காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் சீர்குலைத்துவிட்டன. பெண்களின் உரிமைகளை பறித்துவிட்டன.
மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் வெறுக்கிறது. இதன்காரணமாக இதுதொடர்பான மசோதாக்களை அந்த கட்சி தொடர்ச்சியாக தடுத்து வருகிறது. இப்போதும் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளானதிமுக, திரிணமூல், சமாஜ்வாதிஉள்ளிட்டவையும் மசோதாவை தோற்கடித்து விட்டன. இதன்மூலம் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டனர்.
மக்களிடம் தவறான தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர்களது முகமூடி தற்போது கிழிந்துவிட்டது. அவர்களின் உண்மையான முகம் மக்களுக்கு அம்பலமாகி உள்ளது. பல ஆண்டு தவறை திருத்திக் கொள்ளும்படி காங்கிரஸிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் தவறை திருத்திக் கொள்ளவில்லை.
தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மறைந்துவிட்டது. எனினும் சில பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் ஒட்டுண்ணி போல காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது. காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை பின்பற்றி வருகின்றன. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் வாரிசு அரசியல் பாதிக்கப்படும்.
தங்களின் கட்சிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான மசோதாவை தோற்கடித்து உள்ளன. அவர்களின் தீய எண்ணத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாட்டுக்கு சேவையாற்ற இந்தியப் பெண்கள் தயாராக உள்ளனர். ஆனால் வாரிசு அரசியல் தலைவர்கள், பெண்களின் வளர்ச்சியை விரும்பவில்லை. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் செய்த மாபாதகத்தை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக நாட்டில் பிரிவினையைத் தூண்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. சில மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தால் மேற்குவங்கம், உத்தர பிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரித்திருக்கும். நல்ல வாய்ப்பை திமுக தட்டிக் கழித்துவிட்டது.
பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்
புதிய சீர்திருத்தங்களை அமல்செய்யும்போது எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த கட்சியின் எதிர்மறை செயல்பாடுகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மசோதா நிறைவேறினால்,அதற்கான நற்பெயரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குகிறேன்என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தேன். ஆனால் மகளிர் முன்னேற்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை தோற்கடித்த காங்கிரஸுக்கு பெண்கள் பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தடைகளைத் தகர்ப்போம் என உறுதி
மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் 66 சதவீத வாக்குகள் தேவைப்பட்டன. அந்த வாக்குகளைப் பெற முடியவில்லை.
ஆனால், நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளோம். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவோம்.
நாடாளுமன்றத்துக்கு பெண்கள் வருவதை எதிர்க்கட்சிகளால் தடுக்கமுடியாது. மசோதாவுக்கு எங்களால் போதிய வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், சரியான நேரத்துக்கு காத்திருக்கிறோம். காலம் கனியும்போது இந்தியப் பெண்களின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
சனி, 18 ஏப்ரல், 2026
வஞ்சித்து விட்டார் கிளியே... - மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி - நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 298 பேர் ஆதரவு, 230 பேர் எதிர்ப்பு
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026, சித்திரை, 05, பாரபவ வருடம் 03:50 AM
புதுடெல்லி,
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீதான விவாதம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று காலை விவாதம் தொடர்ந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசினர். கனிமொழி, ஆ.ராசா (திமுக), சசி தரூர், ஜோதிமணி (காங்கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐஜத), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி), ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேமமாலினி (பாஜக) உள்ளிட்ட எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
பிரதமர் மோடி வேண்டுகோள்
இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்தார். ‘மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும், முடிவு எடுக்கும் விஷயத்தில் மகளிருக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட தரப்படவில்லை.
இது சரியான நடவடிக்கை அல்ல. நாட்டின் மக்கள்தொகையில் பாதியளவு இருக்கும் மகளிர் தங்களது உரிமைகளைப் பெறவேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த மசோதா குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு, சரியான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகியோரை நினைத்துப் பார்த்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும். மகளிருக்கு அதிகாரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை பறிக்காதீர்கள். தயவுசெய்து உரிய பரிசீலனை செய்து, முழுஉணர்வுடன் முடிவு எடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வேண்டும்’ என்று அதில் பிரதமர் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா விளக்கம்
மக்களவையில் மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிப் பேசினார். தொகுதி மறுசீரமைப்பின் முடிவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள் அதிகரிக்கும் என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இத்துடன், மறுவரையறை மூலம் தொகுதிகள் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்படும்போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
‘‘தமிழகத்துக்கு தற்போது 39 எம்.பி. தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். இதேபோல, எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதிகரிக்கும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும். 2029-க்கு முன்பு வரை தற்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலேயே அனைத்து தேர்தல்களும் நடைபெறும்’’ என்று அமித் ஷா பேசினார்.
போதிய ஆதரவு இல்லை
அவர் பேசி முடித்ததும், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது. நேற்றைய வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற 2 மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தோல்வி அடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய விவகாரங்களில் கொள்கை முடிவுகள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன், 15 ஏப்ரல், 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM
புதுடெல்லி,
ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
டிரம்ப்பிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம். மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானித்தோம். மேற்கு ஆசிய போர்ச்சூழல் பற்றியும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026
ராகுல்காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026, சித்திரை, பாரபவ வருடம் 01:40 AM
சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
‘ஜனநாயகன்’ பட விவகாரம் - மத்திய தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பரபரப்பு விளக்கம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026, பங்குனி 29, விசுவாவசு வருடம் 00:10 AM
சென்னை,
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.
படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 11 ஏப்ரல், 2026
‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி - டிஜிபியிடம் புகார்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 05:20 AM
சென்னை,
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதாலும், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைப் பிரச்சினை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, படத்தை மறுதணிக்கைக் குழு கடந்த மாதம் பார்த்தது. படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணையத்தில் கடந்த 9-ம் தேதி வெளியானது. பல்வேறு வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டது. இதனால், படத் தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இணையம் மற்றும் வலைதளங்களில் இதுவும் வேகமாக பகிரப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் சூழலில், முழு படமும் இணையத்தில் வெளியானது விஜய் உள்ளிட்ட படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
‘ஜனநாயகன்’ படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளியை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ், யூ-டியூப், இணையதளங்கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றம் செய்வது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது, பரப்புவதுகடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம்செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரியசட்ட நடவடிக்கை தொடங்கிஉள்ளார்.
மேலும், இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்கு, உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம் - அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...