பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 04:30 AM
சபரிமலை,
தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகர விளக்கு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் மகரஜோதியை வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் திகழ்கிறது. மகரஜோதியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாலை அணிந்து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், பொன்னம்பலமேட்டில் மகரஜோதியைக் காண நேற்று காலை முதலே திரண்டிருந்தனர்.
முன்னதாக, மகரஜோதியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்பரிய ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது.
திரு ஆபரணப்பெட்டி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதால் காலை 10 மணி முதல் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, காலை 11 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊர்வலம் சென்ற பிறகே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்நிதானம் வந்த திரு ஆபரணங்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
மகரஜோதி வழிபாட்டுக்கு முன்னோடியாக நேற்று மாலை மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.
தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரிந்ததும், சபரிமலையில் திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் சரணகோஷங்கள் முழங்க தரிசித்தனர். பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும், வண்டிப்பெரியாறு, புல்மேடு, பஞ்சாலிமேடு, சத்திரம், பருந்துப்பாறை, அய்யன்மலை, நீலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
மகரஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மகரஜோதியை தரிசித்த பக்தர்கள், புல்மேட்டில் இருந்து சத்திரம், வல்லக்கடவு வழியாக சந்நிதானம் சென்றனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. மண்டல, மகரவிளக்கு விழாக்களில் இதுவரை 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
வியாழன், 15 ஜனவரி, 2026
புதன், 14 ஜனவரி, 2026
“பழையன கழிதலும் புதியன புகுதலும்..” - பிறந்தது போகி
பதிவு: புதன்கிழமை, ஜனவரி 14, 2026, மார்கழி 30, விசுவாவசு வருடம் 06:40 AM
சென்னை,
பழைய பொருட்களை வீதியில் கொட்டி எரித்தும், மேளத்தை இசைத்தும் போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்
பதிவு: புதன்கிழமை, ஜனவரி 14, 2026, மார்கழி 30, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அதிகளவிலான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு 16 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதனால் சென்னை பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் வேலை, கல்வி, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் ஒரு நாள் முன்பாக இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டிருந்தனர். இதனால் நேற்று காலை முதலே சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் என பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்று பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 9-ம் தேதி கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து கடந்த 9-ம் தேதி இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் மொத்தம் 1.21 லட்சம் பயணிகள், 10-ம் தேதி இயக்கப்பட்ட 2,804 பேருந்துகளில் 1.26 லட்சம் பயணிகள், 11-ம் தேதி இயக்கப்பட்ட 2,760 பேருந்துகளில் 1.13 லட்சம் பயணிகள், 12-ம் தேதி இயக்கப்பட்ட 3,102 பேருந்துகளில் 1.30 லட்சம் பயணிகள் என 4 நாட்களில் 11,372 பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்று மட்டும் பல்வேறு ஊர்களுக்கு மொத்தம் 4,800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கடந்த 5 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதேபோல ரயில்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கினர். குறிப்பாக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, சொந்த ஊருக்கு புறப்பட்டனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களும் நிரம்பி வழிந்தன. நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த 5 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் 3 லட்சம் பேரும், கார்கள், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பொங்கலைக் கொண்டாட கடந்த 5 நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகள் வாயிலாக 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கட்கிழமை காலை மீண்டும் சென்னை திரும்பும் வகையில் பேருந்து, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 13 ஜனவரி, 2026
சபரிமலையில் நாளை (ஜனவரி 14) மகர ஜோதி தரிசனம்...
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 13, 2026, மார்கழி 29, விசுவாவசு வருடம் 02:15 PM
சபரிமலை,
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.
மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகரஜோதி தரிசனம்
முத்தாய்ப்பு நிகழ்வாக நாளை (ஜனவரி 14), மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்காக நாளை பகல் 02.45 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, 03.08 மணிக்கு மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெறும்.
தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 06.15 மணியளவில் சன்னிதானத்தை வந்து அடையும்.
தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருவாபரணப் பெட்டியை வரவேற்று, ஏற்றுக் கொள்வார்கள்.
மாலை 06.40 மணிக்கு திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். தீபாராதனை நடைபெற்ற ஒரு சில நொடிகளிலேயே பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
மகர விளக்கையொட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே மகரவிளக்கு பூஜை நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அன்றைய தினம் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து மகரஜோதி தரிசனத்துக்கு பின்னரே பக்தர்கள் 18-ம் படி வழியாக செல்லலாம்.
மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக இன்று குறைக்கப்பட்டுள்ளது. நாளை மேலும் குறைக்கப்பட்டு 30,000 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வு எடுத்து தங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் அய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாபரணப் பெட்டி வரும் பாதை
திருவாபரணப் பொட்டி ஊர்வலம் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 14 அன்று திருவாபரணப் பெட்டி வரும் பாதையில் பக்தர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனம் பார்க்க பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகரஜோதியை தரிசிக்க உயரமான மரங்களின் மீது ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பம்பையில் இருந்தே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அனுமதித்த இடங்களில் இருந்து மட்டுமே பக்தர்கள் மகரஜோதியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் சென்று மகரஜோதியை பார்க்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 7 மணி நேரம் விசாரணை
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 13, 2026, மார்கழி 29, விசுவாவசு வருடம் 05:40 AM
சென்னை,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர் - டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டும், 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் பல்வேறு ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டினர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவழைத்து, அதிகாரிகள் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பேருந்
தையும் சிபிஐ மற்றும் மத்திய தடயவியல் ஆய்வக நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமராக்கள், அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ கடந்த 6-ம் தேதி சம்மன் அனுப்பியது. சென்னையில் இருந்து விஜய் நேற்று காலை 7.40 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார், உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்களும் சென்றனர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் காலை 11.30 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இதுதொடர்பாக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன? 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதா? திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? உங்கள் வருகை தாமதம் ஆனதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததே நெரிசலுக்கு காரணம் என்ற புகாருக்கு உங்கள் விளக்கம் என்ன? என்பது உட்பட பல கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
சிபிஐ வசம் இருநத பிரச்சார நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள், ட்ரோன் கேமரா பதிவுகளை காண்பித்த அதிகாரிகள், அந்த சூழலில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விளக்கம் கேட்டனர். கூட்டத்தின் நடுவே பிரச்சார வாகனம் சென்ற விதம், அதன் வேகம், அதனால் ஏற்பட்ட நெரிசல் குறித்து ஓட்டுநரிடம் ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
விஜய் பதில்கள் வீடியோவில் பதிவு
சிபிஐ அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விஜய்யும் சளைக்காமல் பதில் அளித்துள்ளார். குறிப்பாக, அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் மிக நிதானமாக பதில் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், விசாரணையின் நடுவே சட்ட ரீதியான சில நுணுக்கங்களை விளக்க அவரது வழக்கறிஞர்கள் குழுவும் அங்கு தயாராக இருந்தது.
விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
விசாரணைக்கு நடுவே, விஜய்க்கு ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்பட்டது. பின்னர், விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மாலை 6.15 மணி அளவில் விசாரணை முடிந்த பிறகு, காரில் விஜய் புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக, கட்சி சார்ந்த நிகழ்வுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு விஜய் வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து செல்வார்.
நேற்று விசாரணைக்கு கருப்பு சட்டை, பேன்ட் அணிந்து வந்திருந்தார். அவரது வருகை காரணமாக சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டிஜிபி, ஐஜியிடமும் தீவிர விசாரணை
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் விசாரணை நடந்த அதே நேரத்தில், தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கரூர் நெரிசல் சம்பவத்தின்போது, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார் டேவிட்சன் தேவாசீர்வாதம். நெரிசல் நடந்த இடத்துக்கு சென்ற இவர், செய்தியாளர்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கி பேட்டி அளித்திருந்தார். இதனால், இவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அதேபோல, நெரிசல் சம்பவம் நடந்தபோது, திருச்சி மத்திய மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர் என்பதால், ஜோஷி நிர்மல் குமாரிடமும் விசாரணை நடை பெற்றுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு, தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி சிபிஐ அதிகாரிகள் இவர்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...